For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

பாலியல் புகார் - போக்குவரத்து காவல் இணை ஆணையர் பணியிடை நீக்கம் !

சென்னை வடக்கு மண்டல போக்குவரத்து காவல் இணை ஆணையர் மகேஷ்குமார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
12:35 PM Feb 13, 2025 IST | Web Editor
பாலியல் புகார்   போக்குவரத்து காவல் இணை ஆணையர் பணியிடை நீக்கம்
Advertisement

சென்னை போக்குவரத்து பிரிவில் இணை ஆணையராக பணி புரிந்து வருபவர் மகேஷ்குமார். ஐபிஎஸ் அதிகாரியான இவர் பெண் போலீஸ் ஒருவரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக புகார் எழுந்துள்ளது. இது குறித்து சம்பந்தப்பட்ட பெண் காவலர் டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார்.

Advertisement

தொடர்ந்து இந்த புகார் மனு மீது உரிய நடவடிக்கை எடுக்க தமிழக அரசு உத்தரவிட்டது. இதன்படி அரசு துறைகளில் பாலியல் புகார்களை விசாரிக்கும் 'விசாகா' கமிட்டிக்கு பெண் காவலரின் புகார் மனு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதுபற்றி விசாகா கமிட்டியில் இடம்பெற்று உள்ள பெண் ஐபிஎஸ்  அதிகாரிகள் குழுவினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதற்கிடையே ஐபிஎஸ் அதிகாரி மகேஷ்குமாரை பணியிடை நீக்கம் செய்து தமிழக அரசு அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் தமிழகம் முழுவதும் பாலியல் சம்பவங்கள் தொடர்பான புகார்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதற்கு தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. அரசு துறையில் உயர் பதவியில் இருப்பவராக இருந்தாலும் அவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார்.

மேலும் காவல் இணையர் மீதான பாலியல் தொல்லை புகாரை விசாரிப்பதற்காக டிஜிபி சீமா அகர்வால் தலைமையில் 'விசாகா' கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. விசாகா கமிட்டியின் விசாரணை அறிக்கையை தொடர்ந்து மகேஷ்குமார் மீது அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
Advertisement