For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

"பாலியல் குற்றங்கள் குறித்து புகார் அளிக்க முன்வர வேண்டும்" - #ActorVishal பேட்டி!

04:54 PM Sep 08, 2024 IST | Web Editor
 பாலியல் குற்றங்கள் குறித்து புகார் அளிக்க முன்வர வேண்டும்     actorvishal பேட்டி
Advertisement

பாதிக்கப்பட்டவர்கள் பாலியல் குற்றங்கள் குறித்து புகார் அளிக்க முன்வர வேண்டும் என நடிகர் சங்க பொதுச்செயலாளர் விஷால் தெரிவித்துள்ளார்.

Advertisement

மலையாள திரையுலகில் பெண்கள் எதிர்கொள்ளும் பாலியல் துன்புறுத்தல்கள் குறித்த நீதிபதி ஹேமா தலைமையிலான ஆணையத்தின் அறிக்கை சமீபத்தில் வெளியானது. நடிகைகளுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் மற்றும் நடிகர்கள், இயக்குநர்கள் உள்ளிட்டோரின் தவறான நடத்தை பற்றிய அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகி இந்திய திரையுலகத்தை உலுக்கியுள்ளது.

இந்த அறிக்கையின் தாக்கத்தை தொடர்ந்து, பல திரையுலகிலும் இதுபோன்ற கமிட்டிகள் அமைக்கபட வேண்டும் என கோரிக்கை எழுந்து வருகிறது. மலையாளம் மட்டுமின்றி தமிழ் சினிமா உள்ளிட்ட மற்ற திரைத்துறையிலும் பாலியல் குற்றச்சாட்டுகள் வெளிவருகின்றன. இதையடுத்து பாலியல் துன்புறுத்தல் குறித்துப் பல நடிகைகள் புகாரளிக்க, சம்பந்தப்பட்ட நடிகர்கள் மீது வழக்குப்பதிவும் செய்யப்பட்டு வருகிறது.

இந்த சூழலில், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 68வது ஆண்டு பேரவை கூட்டம் சென்னை தேனாம்பேட்டையில் இன்று நடைபெற்றது. இதில் நடிகர் சங்கத்தின் உறுப்பினர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த நடிகர் சங்க பொதுச்செயலாளர் விஷால் கூறியதாவது, "பாதிக்கப்பட்டவர்கள் பாலியல் குற்றங்கள் குறித்து புகார் அளிக்க முன்வர வேண்டும். அதில் சம்பந்தபட்டவர்கள் யாராக இருந்தாலும் கண்டிப்பாக தண்டனை அளிக்கப்படும். நடிகர் சங்கம் மேல் நம்பிக்கை வைத்து புகார் அளியுங்கள். நாங்கள் கண்டிப்பாக நடவடிக்கை எடுப்போம். பாலியல் குற்றங்கள் குறித்து சொன்னால்தான் தெரியும், இல்லையென்றால் எங்களுக்கு தெரியாது."

இவ்வாறு நடிகர் சங்க பொதுச்செயலாளர் விஷால் தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement