பாலியல் வன்கொடுமை வழக்கு - பிரஜ்வல் ரேவண்ணாவின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது பெங்களூரு நீதிமன்றம்!
ஆபாச வீடியோ, பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள பிரஜ்வல் ரேவண்ணாவின் ஜாமீன் மனுவை பெங்களூரு நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும், ஹாசன் மக்களவைத் தொகுதியின் முன்னாள் எம்பியுமான பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களைப் பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், மேலும் தன்னிடம் உதவி கேட்டு வந்த ஏராளமான பெண்களைப் பிரஜ்வல் பாலியல் தேவைகளுக்காகப் பயன்படுத்திக் கொண்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
இது பல சர்ச்சைகளை ஏற்படுத்தியதையடுத்து, பல பெண்கள் அளித்த புகாரின் அடிப்படையில் பிரஜ்வல் ரேவண்ணா கடந்த மே 31ஆம் தேதி கைது செய்யப்பட்டார். இந்த வழக்குகள் மீதான விசாரணை நடைபெற்று வரும் நிலையில், பிரஜ்வல் ரேவண்ணாவை 14 நாட்களுக்கு நீதிமன்ற காவலில் வைக்க பெங்களூரு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதையும் படியுங்கள் :“இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குரலும் நாடாளுமன்றத்தில் எதிரொலிப்பதை உறுதி செய்வோம்” – மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த ராகுல் காந்தி!
இந்நிலையில், ஆபாச வீடியோ, பாலியல் வன்கொடுமை வழக்கில் பிரஜ்வல் ரேவண்ணாவின் ஜாமின் மனு பெங்களூரு நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. குற்றத்தின் தீவிரத்தை கருத்தில் கொண்டு ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்படுவதாக பெங்களூரு நீதிமன்றம் தெரிவித்துள்ளது.