Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

சென்னை கலாஷேத்ரா முன்னாள் பேராசிரியர் மீதான பாலியல் வழக்கு - 4 வாரங்களில் விசாரணையை துவங்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

கலாஷேத்ரா நடனப் பள்ளியின் முன்னாள் பேராசிரியர் ஶ்ரீஜித் கிருஷ்ணா மீதான பாலியல் வழக்கின் விசாரணையை நான்கு வாரங்களில் துவங்க வேண்டும் என சைதாப்பேட்டை நீதிமன்றத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
03:38 PM Feb 11, 2025 IST | Web Editor
Advertisement

கலாஷேத்ரா நடனப் பள்ளியில் கடந்த 1995-2001ம் ஆண்டு வரை படித்த மாணவி, பேராசிரியர் ஶ்ரீஜித் கிருஷ்ணா தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக காவல்துறையில் புகார் அளித்திருந்தார்.

Advertisement

இந்த புகாரின் அடிப்படையில் ஶ்ரீஜித் கிருஷ்ணா மீது வழக்குப் பதிவு செய்யுமாறு காவல்துறைக்கு உத்தரவிடக்கோரி முன்னாள் மாணவி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது காவல் துறை தரப்பில் ஆஜரான அரசு வழக்கறிஞர் கே.எம்.டி.முகிலன், முன்னாள் மாணவி அளித்த புகாரின் அடிப்படையில் ஶ்ரீஜித் கிருஷ்ணாவுக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு, சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகக் கூறினார்.

இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதி, இறுதி அறிக்கையை கோப்புக்கு எடுத்து, நான்கு வாரங்களில் விசாரணையை துவங்கும்படி, சைதாப்பேட்டை நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தார்.

Tags :
enquirykalakshetraMadras High Court
Advertisement
Next Article