Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

பாலியல் விவகாரம்! - மஜத கட்சியிலிருந்து பிரஜ்வால் ரேவண்ணா இடைநீக்கம்!

01:57 PM Apr 30, 2024 IST | Web Editor
Advertisement

பாலியல் புகாரில் சிக்கிய பிரஜ்வால் ரேவண்ணாவை மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியில் இருந்து  இடைநீக்கம் செய்து அக்கட்சி தலைவர் குமாரசாமி அறிவித்துள்ளார்.

Advertisement

இந்தியாவில் 18வது நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. 2 கட்ட தேர்தல்கள் முடிந்துள்ள நிலையில், இன்னும் 5 கட்ட தேர்தல்கள் நடைபெற உள்ளது.  நாடு முழுவதும் 3 ஆம் கட்ட தேர்தல் மே.7 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில், கர்நாடகா மாநிலத்தை பொறுத்தவரை முதல் கட்ட தேர்தல் முடிவடைந்த நிலையில், 2ம் கட்ட தேர்தல் மே மாதம் 7ஆம் தேதி நடைபெற உள்ளது.

இதனிடையே கர்நாடகாவின் ஹசன் தொகுதி பாஜக கூட்டணி கட்சி வேட்பாளருமான பிரஜ்வல் ரேவண்ணா போட்டியிடுகிறார். முன்னாள் பிரதமர் தேவ கவுடாவின் பேரனான இவர் போட்டியிடும் தொகுதிக்கு கடந்த 26-ஆம் தேதி (26.03.2024) அன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்நிலையில், பிரஜ்வல் ரேவண்ணா மீது பாலியல் புகார் கூறப்பட்டதோடு, அது தொடர்பான ஆபாச வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி பரபரப்பை கிளப்பியது.

இதையும் படியுங்கள் : “கோவையில் பெயர் நீக்கம் செய்யப்பட்ட வாக்காளர்களை மீண்டும் பட்டியலில் இணைக்க உத்தரவிட முடியாது!” – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

இது தொடர்பாக மகளிர் ஆணையம் அளித்த புகாரின் பேரில் சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணைக்கு முதலமைச்சர் சித்தராமையா உத்தரவிட்டுள்ளார்.இதையடுத்து இந்த விவகாரத்தில் பிரஜ்வல் மீதும் அவரது தந்தை ரேவண்ணா மீதும் காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.

பிரஜ்வல் ரேவண்ணாவை கண்டித்து கர்நாடக காங்கிரஸ் கமிட்டி ஆர்ப்பாட்டம் நடத்தியது. பெங்களூருவில் அகில இந்திய மகிளா காங்கிரஸ் தலைவர் அல்கா லம்பா தலைமையில் கர்நாடக காங்கிரஸ் கமிட்டி அலுவலகம் முன்பு அக்கட்சியின் மகளிர் அணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இதையடுத்து,  இந்த புகாரை தேசிய மகளிர் ஆணையம் தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது.  இந்த வழக்கில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து 3 நாட்களில் அறிக்கை தாக்கல் செய்ய கர்நாடக டிஜிபிக்கு மகளிர் ஆணையம் கடிதம் அனுப்பியது.

இந்நிலையில்,பாலியல் புகாரில் சிக்கிய எம்.பி பிரஜ்வால் ரேவன்னாவை மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியில் இருந்து  இடைநீக்கம் செய்து அக்கட்சி தலைவர் குமாரசாமி அறிவித்துள்ளார்.

Tags :
BJPcaseKarnatakaNational Commission for WomenNDAAllaincePrajwal Revanna
Advertisement
Next Article