207 ரன்கள் இலக்கு நிர்ணயம்... கொல்கத்தாவிடம் அடைந்த தோல்விக்கு பழித்தீர்க்க முயலுமா ராஜஸ்தான்?
நடப்பு ஐ.பி.எல் தொடரில் ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்று வரும் 53வது லீக் சுற்றுப்போட்டியில் கொல்கத்தா – ராஜஸ்தான் அணிகள் மோதி வருகின்றன. ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 20 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 206 ரன்கள் குவித்தது. இதன்மூலம் ராஜஸ்தான் அணிக்கு 207 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கொல்கத்தா தரப்பில் அதிகபட்சமாக ரசேல் 57 ரன்களும், ரகுவன்ஷி 44 ரன்களும் அடித்தனர். இதனைத்தொடர்ந்து ராஜஸ்தான் 208 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்க உள்ளது.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பிளே ஆப் வாய்ப்பை ஏற்கனவே இழந்துவிட்டது. ராஜஸ்தான் இதுவரை ஆடிய 11 போட்டிகளில் 3 வெற்றி, 8 தோல்வி என 6 புள்ளிகளுடன் 8-வது இடத்தில் இருக்கிறது. கொல்கத்தா அணி 10 போட்டிகளில் 4 வெற்றியுடனும், 5 தோல்வி, 1 போட்டி மழையால் ரத்து என புள்ளிப் பட்டியலில் உள்ளது.
ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர்கள் முந்தைய லீக் ஆட்டத்தில் கொல்கத்தாவிடம் அடைந்த தோல்விக்கு பழித்தீர்க்க முயல்வார்கள் என்பதால் இன்றைய போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.