Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

தொடர் விடுமுறை எதிரொலி | பல மடங்கு உயர்ந்த விமான கட்டணம்!

03:09 PM Aug 15, 2024 IST | Web Editor
Advertisement

சுதந்திர தின விழா மற்றும் தொடர் விடுமுறையையொட்டி மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்வதால் விமான கட்டணங்கள் பல மடங்கு உயர்ந்துள்ளன.

Advertisement

நாட்டின் 78-வது சுதந்திர தின விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் இன்று பொதுவிடுமுறை ஆகும். அதாவது அத்தியாவசிய சேவைகள் தவிர மற்ற அனைத்து நிறுவனங்களுக்கும் இன்று கட்டாய விடுமுறை ஆகும். சில நிறுவனங்கள் வார விடுமுறையுடன் சேர்த்து 4 நாட்கள் விடுமுறை அறிவித்துள்ளன. இதனால் சென்னையில் தங்கி பணிபுரிபவர்கள் நேற்று மாலை முதல் தங்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றனர்.

இதற்காக சிறப்புப் பேருந்துகள் மற்றும் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. பேருந்துகள், ரயில்களில் இருக்கைகள் அனைத்தும் நிரம்பிவிட்டதால், ஏராளமானோா் இன்று விமானம் மூலம் தங்கள் சொந்த ஊா்களுக்கு புறப்பட்டு சென்றனா். இதனால் சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் கூட்டம் அலைமோதியது.

குறிப்பாக சென்னையில் இருந்து தூத்துக்குடி, மதுரை, திருச்சி, கோவை, சேலம் மற்றும் திருவனந்தபுரம், கொச்சி, பெங்களூரு, ஹைதராபாத் ஆகிய நகரங்களுக்கு சென்ற விமானங்களில் கூட்டம் அதிகமாகவே காணப்பட்டது. இதன் காரணமாக விமான பயணக் கட்டணமும் பல மடங்கு அதிகரித்துள்ளது. சென்னை - மதுரை வழக்கமான கட்டணம் ரூ.4,063 ஆக இருக்கும். ஆனால் தற்போது ரூ.11,716 வரை விற்பனையாகிறது.

இதேபோல் சென்னை - தூத்துக்குடிக்கு வழக்கமான கட்டணம் ரூ.4,301 ஆக இருந்த நிலையில், இன்று ரூ.10,796 -க்கு  விற்பனை செய்யப்படுகிறது.  அதேபோல், சென்னை - திருச்சி விமான பயணச்சீட்டு ரூ.2,382 இல் இருந்து ரூ.7,192 ஆகவும், சென்னை-கோவைக்கு ரூ.3,369 இல் இருந்து ரூ.5,349 ஆகவும், சென்னை-சேலத்துக்கு ரூ.2,715 இல் இருந்து ரூ.8,277 ஆகவும் உயர்ந்துள்ளன.  இருந்தபோதும், கட்டண உயர்வைப் பற்றி கவலைப்படாமல், விடுமுறையை சொந்த ஊரில் கழிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் பயணிகள் போட்டி போட்டுக் கொண்டு, விமானங்களில் பயணம் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

Tags :
78th Independence DayAirfareChennaiholidayIndependence Day
Advertisement
Next Article