தொடர் விடுமுறை எதிரொலி | காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் அலைமோதிய மக்கள் கூட்டம்...!
தொடர் விடுமுறை காரணமாக சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் மீன்களை வாங்க கூட்டம் மக்கள் அலைமோதி காணப்படுகிறது.
ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் இன்று காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில்
இருந்து விசைப்படகுகள் மூலம் மீனவர்கள் ஆழ்கடலுக்கு மீன் பிடிக்க சென்று
இன்று அதிகாலை மீன் விற்பனை செய்வதற்காக கரை திரும்பிய நிலையில் காசிமேடு
சந்தையில் மீன் விற்பனைக்காக ஏலம் முறையில் மீன்ங்கள் விற்பனை செய்யப்பட்டது.
பெறிய வகை மீன்களான வஞ்சிரம் வவ்வால் சீலா பாறை சூறை பால் சுறா உள்ளிட்ட
மீன்களும் மற்றும் சிறிய வகை நீங்களான சங்கரா நண்டு இறால் காணங்கத்தை நவரை
நெத்திலி உள்ளிட்ட மீன்களின் வரத்து அதிகமாக காணப்பட்டது.
பெரிய வகை மீன்களான வஞ்சிரம் 800 ரூபாய்க்கும் சங்கரா வவ்வால் பாறை சீலா
உள்ளிட்டு மீன்கள் 500 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோன்று சிறிய
வகை மீன்களின் வரத்தும் அதிகமாகவே காணப்பட்டது. மொத்த விற்பனையாளர்களும் மீன் வாங்குவதற்காக வந்திருந்தனர். இதனால் அதிகாலை முதலில் மீன் பிரியர்களின்
கூட்டம் அதிகமாகவே காணப்பட்டது.
சுற்றுவட்டார பகுதியில் உள்ள மீன் மார்க்கெட் பகுதிகளில் மீன் விற்பனை
செய்வதற்காக ஏலம் முறையில் மீன்களை வாங்கி சில்லறை விலையில் விற்பனை செய்ய
பெண்கள் கூடை கூடையாக தேவையான மீன்களை வாங்கிச் சென்றனர்.
இன்று மீன்களின் விலை பட்டியல்
வஞ்சிரம் 800 முதல் 1000
வவ்வால் − வெள்ளை நிறம் 600
திறுக்கை-500
சிறிய வவ்வால் 500
கொடுவா 600
சீலா 300
சங்கரா 500
பாறை 500
இறால்-300
நண்டு -300
கடமா பெரியது 300
நவரை -200
காணங்கத்தை -200
நெத்திலி-200