For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

#Beef வைத்திருந்ததாக கூறி தொடர் தாக்குதல்கள்… ஒரே வாரத்தில் 2 சம்பவங்களால் அதிர்ச்சி!

06:15 PM Aug 31, 2024 IST | Web Editor
 beef வைத்திருந்ததாக கூறி தொடர் தாக்குதல்கள்…  ஒரே வாரத்தில் 2 சம்பவங்களால் அதிர்ச்சி
Advertisement

இந்த வார தொடக்கத்தில் மாட்டிறைச்சி சாப்பிட்டதாக ஒருவர் அடித்து கொல்லப்பட்ட நிலையில், தற்போது மாட்டிறைச்சி கொண்டு செல்லப்பட்டதற்காக முதியவர் ஒருவர் தாக்கப்பட்டுள்ளார்.

Advertisement

மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் மாவட்டத்தில் உள்ள இகத்புரி அருகே எக்ஸ்பிரஸ் ரயிலில் மாட்டிறைச்சி கொண்டு சென்றதாக முதியவர் ஒருவரை சக பயணிகள் தாக்கியுள்ளனர். இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலானதையடுத்து, விசாரணை தொடங்கப்பட்டதாக ரயில்வே போலீசார் தெரிவித்துள்ளனர்.

மகாராஷ்டிராவின் ஜல்கான் மாவட்டத்தை சேர்ந்த ஹாஜி அஷ்ரஃப் முனீர் என்ற முதியவர், தானேவில் உள்ள தனது மகள் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது மாட்டிறைச்சி கொண்டு சென்றதாக சக பயணிகளால் தாக்கப்பட்டுள்ளார். வீடியோவில் பத்துக்கும் மேற்பட்டோர் அவரை தாக்குகின்றனர். மேலும் பலர் தகாத வார்த்தைகளால் திட்டுகின்றனர். இது இந்த வாரத்தில் நாம் கேள்விப்படும் இரண்டாவது செய்தி.

ரயிலில் தாக்கப்பட்ட முதியவர்

இதேபோல கடந்த 27ஆம் தேதி கூட ஹரியானாவில் புலம்பெயர் தொழிலாளி சபீர் மாலிக் என்பவர், மாட்டிறைச்சி சாப்பிடதற்காக 7 பேர் கொண்ட கும்பலால் தாக்கப்பட்டு, உயிரிழந்தார். இந்த கொலை சம்பவத்தில் இரண்டு சிறுவர்கள் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வங்கதேசத்தை சேர்ந்த அவர் குடிசை ஒன்றில் தங்கி, குப்பைகளில் கிடைக்கும் பிளாஸ்டிக் பாட்டில்களை விற்று தனது வாழ்க்கையை நடத்தி வந்துள்ளார்.

இந்நிலையில் அவர் மாட்டிறைச்சி சாப்பிட்டதாக கூறி, முதலில் கடை ஒன்றுக்கு அழைத்து சென்று அவரை தாக்கிய அந்த கும்பல், பலரின் தலையீட்டால் வேறு இடத்திற்கு அழைத்து சென்றுள்ளனர். தொடர்ந்து தாக்கியதில் அவர் உயிரிழந்தார்.

இதேபோல் கடந்த ஆண்டு பிப்ரவரியில் ராஜஸ்தானை சேர்ந்த இரண்டு முஸ்லீம்கள், ஹரியானைவைச் சேர்ந்த பசு பாதுகாவலர்கள் என்ற கும்பலால் கடத்தப்பட்டனர். அந்த கும்பல் அவர்களை கொன்று உடல்களையும் எரித்தது. இருவரின் உடல் கருகிய நிலையில் காரில் கண்டெடுக்கப்பட்டது. இதுபோன்ற சம்பவங்கள் தொடர்கதையாகி வருகின்றன.

மாட்டிறைச்சி அல்லது அசைவ உணவு என்பது தனிப்பட்ட மனிதனின் உணவு சுதந்திரம் என்றும் அதனை புரிந்துகொள்ளாமல் சில மதவெறியர்கள் இவ்வாறு கொடூரமான தாக்குதல்களை தொடர்ந்து வருவதாகவும் மனித உரிமை ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags :
Advertisement