For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

"செப்.6 காவலர்கள் நாள் கொண்டாட்டம்" - சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

செப்டம்பர் 6ஆம் தேதி காவலர் நாள் கொண்டாடப்படும் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
11:55 AM Apr 29, 2025 IST | Web Editor
 செப் 6 காவலர்கள் நாள் கொண்டாட்டம்    சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் அறிவிப்பு
Advertisement

தமிழ்நாடு சட்டப்பேரவையில் கடந்த மாதம் 14ம் தேதி பொது பட்ஜெட்டும், 15ம் தேதி வேளாண் பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டது. தொடர்ந்து, 17ம் தேதி முதல் இரு பட்ஜெட்டுகள் மீதான விவாதம் நடைபெற்றது. இதனையடுத்து, 24ம் தேதி முதல் துறை வாரியாக மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், நேற்று தாக்கல் செய்யப்பட்ட காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பதிலளித்து பேசினார். அப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காவலர் நாள் குறித்த அறிவிப்பை வெளியிட்டார். இதுகுறித்து சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது,

Advertisement

"சட்டம் - ஒழுங்கை பாதுகாத்து இரவுபகலாக வேலை செய்யும் காவல்துறையினருக்கான தனி நாளை அறிவிக்க விரும்புகிறேன். 1859 ஆம் ஆண்டு மெட்ராஸ் மாவட்ட காவல் சட்டம் நிறைவேற்றப்பட்ட செப்டம்பர் 6 ஆம் நாள் காவலர் நாள் கொண்டாடப்படும். இந்த நாளில் கடமை, கண்ணியத்தை பின்பற்றி செயல்பட்ட காவலர்களுக்கு பதக்கங்கள் வழங்கப்படும். அனைத்து மாவட்டங்களிலும் காவல்துறை கண்காட்சிகள் நடத்தப்படும். ரத்த தான முகாம்கள் நடத்தப்படும்” என்றார்.

இதனைத் தொடர்ந்து, நீலகிரி, தருமபுரியில் ஆயுதப் படை காவலர்கள் குடியிருப்புகள் கட்டப்படும், காவல்துறைக்கு 350 நான்கு சக்கர வாகனங்கள் வாங்கப்படும், 50 தடயவியல் நடமாடும் வாகனங்கள் வாங்கப்படும் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட அறிவிப்புகளை வெளியிட்டார்.

Tags :
Advertisement