Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

வெயிலால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க அரசு ஆஸ்பத்திரிகளில் தனி வார்டுகள் அமைப்பு!

10:55 AM May 05, 2024 IST | Web Editor
Advertisement

வெயிலால் பாதிக்கப்படும் நேயாளுகளுக்கு சிகிச்சை அளிக்க சென்னையில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளில் தனி வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளது.

Advertisement

தமிழ்நாட்டில் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. நேற்று முதல் ‘அக்னி நட்சத்திரம்’ எனப்படும் கத்திரிவெயிலும் தொடங்கியது. சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் கத்திரி வெயிலின் தாக்கம் இருந்தது. வெயிலுடன் சேர்ந்து அனல் காற்றும் வீசியதால் பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள். சென்னையில் நுங்கம்பாக்கம், மீனம்பாக்கம் ஆகிய பகுதிகளில் 100 டிகிரியை தாண்டியே வெப்பத்தின் அளவு பதிவாகி வருகிறது.

கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் வேலை காரணமாக வெளியில் செல்லும் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். அப்படி செல்லும் போது அவர்களுக்கு நீர்ச்சத்து குறைவு ஏற்படுகிறது. வெயிலின் தாக்கத்தால் உடலில் இருந்து அதிக வியர்வை வெளியேறும் போது உப்புச்சத்து மற்றும் நீர்ச்சத்து பற்றக்குறை ஏற்படுகிறது. இதனால் அதிக தாகம், தலை வலி, உடல் சோர்வு, தலை சுற்றல், தசைப்பிடிப்பு, மயக்கம், வயிற்றுப்போக்கு, அஜீரணக் கோளாறு மற்றும் வலிப்பு போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றது. இதுபோன்ற பாதிப்புகள் ஏற்படும் போது சிலர் அதை சாதாரணமாக எடுத்துக்கொள்கின்றனர். இதனால், அவர்களுக்கு பக்கவாதம், மூளை சம்பந்தப்பட்ட நோய்கள் ஏற்படுகிறது.

எனவே, வெப்பத்தால் உடல் நலக்குறைவு ஏற்படும் பட்சத்தில் அவர்கள் உடனடியாக டாக்டரை உடனே அணுகி சிகிச்சை எடுத்துக் கொள்ள மருத்துவத்துறை அறிவுறுத்தி வருகிறது. கத்திரி வெயிலின் தாக்கத்தால் வெப்பம் சார்ந்த நோய்கள் அதிகமாக ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளது.

எனவே, அதற்கு சிகிச்சை அளிக்கும் வகையில் சென்னையில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளில் சிறப்பு வார்டுகள் அமைக்கபப்ட்டுள்ளது. அந்த வகையில் கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனி வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வார்டிலும் 10 படுக்கைகள் வீதம் மொத்தம் 20 படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு வெப்பத்தின் தாக்கத்தால் பாதிக்கப்பட்டு வரும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க 10-க்கும் மேற்பட்ட நர்சுகள் பணியில் ஏடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இதேபோல, ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் 10 படுக்கைகள் கொண்ட தனி வார்டு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த வார்டில் 3 வெண்டிலேட்டர் கருவிகளும், ரத்த பரிசோதனை உள்ளிட்ட அனைத்தும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரியை பொறுத்தவரை வெப்பத்தால் பாதிக்கப்படும் நபர்களுக்கு சிகிச்சை அளிக்க ஏதுவாக தீவிர சிகிச்சைப் பிரிவில் 5 படுக்கைகள் தனியாக ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த தனி வார்டுகளில் அரிசி கஞ்சி, ஓ.ஆர்.எஸ். எனப்படும் உப்பு - சர்க்கரை கரைசல் ஆகியவை வழங்கப்படுகிறது.

Tags :
diseasegovt hospitalsheat waveNews7Tamilnews7TamilUpdatesORSsummertreatmentWard
Advertisement
Next Article