செப். 5ம் தேதி வங்கக்கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி | #MeteorologicalCentre எச்சரிக்கை!
வங்கக்கடலில் வரும் செப்டம்பர் 5-ஆம் தேதி ஒரு புதிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் வரலாறு காணாத கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இந்த கனமழையால் இரு மாநிலங்களிலும் இதுவரை 30 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் பொது மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், வங்கக்கடலில் வரும் செப்டம்பர் 5-ஆம் தேதி ஒரு புதிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதையும் படியுங்கள் : மலையாள திரையுலகின் பாலியல் விவகாரம் – #ActorBaburaj மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு!
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:
"ஆந்திரம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.மேலும், மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் 5ஆம் தேதி ஒரு காற்றழுத்ததாழ்வு பகுதி உருவாகக்கூடும். இதன் காரணமாக இன்றும் (செப்டம்பர் - 3ம் தேதி), நாளையும்(செப்டம்பர் - 4ம் தேதி) தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். செப்டம்பர் 5ம் தேதி வங்கக்கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாகக்கூடும். தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு"
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.