For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

ஐடிஐ மாணவர் தலையில் கல்லை போட்டு கொலை செய்த சீனியர்கள்!

தவறான தகவலால் ஐடிஐ மாணவர் தனது சீனியர்களால் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
09:17 PM Jul 16, 2025 IST | Web Editor
தவறான தகவலால் ஐடிஐ மாணவர் தனது சீனியர்களால் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஐடிஐ மாணவர் தலையில் கல்லை போட்டு கொலை செய்த சீனியர்கள்
Advertisement

Advertisement

மதுரை மாவட்டம் சிலைமான் அருகே இளமனூர் பகுதியில் கண்மாய் கரை பகுதியில் பாதி எரிந்த நிலையில் உடல் கிடப்பதாக காவல்துறையினருக்கு நேற்று முன்தினம் (திங்கட்கிழமை) மாலை அப்பகுதி பொதுமக்கள் தகவல் அளித்துள்ளனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற சிலைமான் காவல்துறையினர் மற்றும் தடயவியல் நிபுணர்கள் உடல் கிடந்த இடத்தில் இருந்து விசாரணை செய்து பின்னர் உடலை மீட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு உடற்கூராய்விற்காக அனுப்பி வைத்தனர்.

அப்போது காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில் அங்கிருந்து கைப்பற்றப்பட்ட உடலானது 20 வயதிற்கு உட்பட்ட நபரின் உடலாக இருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகித்தனர்.

பின்னர் உடல் கிடந்த பகுதியில் இருந்து கைப்பற்றப்பட்ட சீருடை காலரில் இருந்த டெய்லர் கடைக்கு சென்று காவல்துறையினர் விசாரணை நடத்தியபோது அதே கலர் சீருடையை 4 பேர் தைத்து சென்றதாக கூறினார். பின்பு மதுரை மாவட்டம் யானைமலை ஒத்தக்கடை சுதந்திர நகர் 2 வது தெரு பகுதியைச் சேர்ந்த பிரசன்னா (17) என்ற ஐடிஐ மாணவர் தவிர மற்ற 3 பேரும் வீட்டில் இருப்பது தெரிய வந்துள்ளது.

இதனிடையே நேற்று காலையில் பிரசன்னா கல்லூரிக்கு செல்வதாக கூறிவிட்டு சென்று இரவு வரை வீடு திரும்பவில்லை எனக் கூறி ஒத்தக்கடை காவல் நிலையத்தில் பெற்றோர் புகார் அளித்துள்ளனர்.

அப்போது பிரசன்னாவின் பெற்றோரை மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அழைத்து சென்று உடலை காட்டியபோது அந்த கையில் 6 விரல்கள் இருப்பதும், உடல் கிடந்த பகுதியில் உள்ள காலணி ஆகியவற்றை பார்த்தபோது மாணவர் பிரசன்னாவின் உடல் என உறுதிசெய்யப்பட்டது.

பின்னர் சிலைமான் காவல் நிலையத்தில் பிரசன்னாவின் பெற்றோர் அளித்த புகாரின் கீழ் வழக்குப்பதிவு செய்த சிலைமான் காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர்.

முதற்கட்டமாக அப்பகுதியில் உள்ள பொதுமக்களிடம் விசாரணை நடத்திய போது பிரசன்னா உள்ளிட்ட 4 பேர் கண்மாய் பகுதிக்கு சென்றதை பார்த்ததாக கூறியுள்ளனர்.

இதனையடுத்து இளமனூரில் பிரசன்னாவின் உடல் கிடந்த பகுதியில் கல் ஒன்று ரத்தக்கறையுடன் இருந்த நிலையில் உடல் எரிக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டதால் பிரசன்னாவுடன் கண்மாய் கரைக்கு வந்தவர்கள் பிரசன்னாவை தலையில் கல்லை போட்டு கொலை செய்துவிட்டு எரிக்க முயற்சித்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் பிரசன்னாவுடன் வந்த 3 நபர்களை தேடி வந்தனர்.

மேலும் பிரசன்னாவுடன் நெருக்கமாக உள்ள கல்லூரி நண்பர்களின் வருகைப் பதிவேடு குறித்தும் விசாரணை நடத்திய காவல் துறையினர் கொலை சம்பவத்திற்கான காரணம் குறித்து தீவிரமாக பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினர்.

இதனையடுத்து மதுரை முண்டநாயகம் கிராமத்தைச் சேர்ந்த ராமர் (19), மானகிரி அபினேஷ் (19), ஆகியோர் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.

மேலும் ஒத்தக்கடை முண்டநாயகம் பகுதியைச் சேர்ந்த தாமோதரன் (21), கருப்பாயூரணியை சேர்ந்த அசோக்பாண்டியை (19) ஆகிய இருவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

ஐடிஐ மாணவர் பிரசன்னா கொலை செய்யப்பட்ட வழக்கில் இரண்டு பேர் சரணடைந்த நிலையில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தியதில் பிரசன்னாவின் நண்பரான ராமரை சில நாட்களுக்கு முன்பாக யாரோ ஒரு நபர் தாக்கியுள்ளனர், பிரசன்னாதான் தாக்கியதாக தவறான தகவல் கிடைத்த நிலையில் ராமர் தனது சீனியர்களான அபினேஷ், தாமோதரன், அசோக் பாண்டி ஆகியோருடன் சேர்ந்து பிரசன்னாவை இளமனூர் பகுதிக்கு அழைத்துச் சென்று பேசியபோது ஏற்பட்ட தகராறில் கல்லால் தலையில் அடித்து மயங்கிய நிலையில் கொலை செய்து பின்னர் உடலை பெட்ரோல் ஊற்றி எரித்துவிட்டு தப்பியோடிதும் தெரிய வந்தது.

மதுரையில் தன்னை தாக்கியவர் குறித்த தவறான தகவலால் ஐடிஐ மாணவர் தனது சீனியர்களால் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags :
Advertisement