For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

சர்வதேச மூத்தோர் உலகக் கோப்பை கிரிக்கெட் - சென்னையில் தொடக்கம்!

07:45 AM Feb 19, 2024 IST | Web Editor
சர்வதேச மூத்தோர் உலகக் கோப்பை கிரிக்கெட்   சென்னையில் தொடக்கம்
Advertisement

சர்வதேச அளவிலான 2வது மூத்தோர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் தொடக்க விழா சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் கோலகலமாக தொடங்கியது.

Advertisement

சர்வதேச அளவிலான 12 நாடுகள் பங்கேற்கும் 60 வயதிற்கு மேற்பட்டோருக்கான 2வது மூத்தோர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி சென்னையில் நடைபெற உள்ளது. 60 வயதுக்கு மேற்பட்டோருக்கான உலக கோப்பை கிரிக்கெட் போட்டி முதன் முதலாக
கடந்த 2022 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் உள்ள குயின்ஸ்லாந்து நகரில் நடைபெற்றது.
மொத்தம் 12 அணிகள் பங்கேற்ற அந்த உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி சாம்பியன் பட்டம் வென்றது.

இதையும் படியுங்கள் : மேயர் தேர்தல் முறைகேடு தொடர்பாக இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணை – சண்டிகர் மேயர் திடீர் ராஜிநாமா!

வெடரன் கிரிக்கெட் இந்தியா (வி.சி.ஐ) அமைப்பு சார்பில் 2வது உலக கோப்பை
கிரிக்கெட் போட்டி சென்னையில் நடத்தப்படுகிறது. இந்நிலையில், இன்று முதல் தொடங்கி மார்ச் மாதம் 2 ஆம் தேதி வரை நடைபெற உள்ள இந்த போட்டியில் மொத்தம்
12 அணிகள் பங்கேற்று விளையாட உள்ளன. இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, கனடா, தென்கொரியா, நியூசிலாந்து, அமெரிக்கா, ஜிம்பாவே, இதர உலக அணி, வேல்ஸ், வெஸ்ட் இண்டீஸ், இலங்கை ஆகிய 12 அணிகள் இடம்பெற்றுள்ளன.

முன்னாள் சர்வதேச கிரிக்கெட் நடுவர்களும், தமிழ்நாடு கிரிக்கெட் சங்க
ஸ்கோரர்களும் இந்த போட்டிகளுக்கு பணியாற்றுகின்றனர். மேலும், 45 ஓவர்கள் அடிப்படையில் நடைபெறும் இந்த போட்டிகள் சென்னை மற்றும் சென்னையைச் சுற்றியுள்ள பல்வேறு மைதானங்களில் நடைபெறுகிறது.

முன்னதாக, மூத்தோர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் துவக்க விழா நேற்று சென்னை கிழக்கு கடற்கரை சாலை ஈஞ்சம்பக்கத்தில் உள்ள தனியார் வளாகத்தில் நடைபெற்றது. இதன் துவக்க விழாவில் 12 அணிகளின் கேப்டன்கள், மேலாளர்கள் தங்கள் நாட்டு கொடியுடன் அணிவகுப்பு நடத்தினர். அப்போது அந்த அந்த நாட்டின் தேசிய கீதம்
ஒளிக்கப்பட்டது. இதையடுத்து, நிகழ்ச்சியின் இறுதியில் மூத்தோர் உலக கோப்பைக்கான கோப்பை அறிமுக விழாவும் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் 12 நாடுகளை சேர்ந்த வீரர்கள், மேலாளர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags :
Advertisement