Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

”செங்கோட்டையன் அதிமுக ஒன்றிணைய வேண்டும் என சொல்வது நல்ல முயற்சி” - நயினார் நாகேந்திரன்!

அதிமுக ஒன்றிணைய வேண்டும் என செங்கோட்டையன் சொல்வது நல்ல முயற்சி என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
12:49 PM Sep 05, 2025 IST | Web Editor
அதிமுக ஒன்றிணைய வேண்டும் என செங்கோட்டையன் சொல்வது நல்ல முயற்சி என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
Advertisement

வ உ சிதம்பரனாரின் 154 வது பிறந்தநாளையொட்டி பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நெல்லையில் உள்ள வ.உ.சி யின் முழு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

Advertisement

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்,

”செங்கோட்டையன் பேச்சு என்பது அதிமுக உட்கட்சி விவகாரம். யாருடைய குரலாகவும் யாரும் பேசவில்லை அவர்களது சொந்த குரலில் தான் அவர்கள் பேசிக்
கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்குள் பேசி முடித்துக் கொள்ள வேண்டும். அதிமுக ஒன்றிணைய வேண்டும் என செங்கோட்டையன் சொல்வது நல்ல விஷயம்.  அதிமுக இணைப்பு குறித்து எடப்பாடி பழனிச்சாமி தான் பேச
வேண்டும் தேவைப்பட்டால் நான் அவரோடு பேசுகிறேன். ஆரம்ப காலத்தில் இருந்து அதிமுக இணைய வேண்டும் என சொல்லிக் கொண்டிருக்கிறேன். திமுகவை தவிர்த்து அனைவரும் ஓரணியில் இணைய வேண்டும் அனைவரும் வரவேண்டும் வருவார்கள். அதிமுகவில் அனைவரும் ஒற்றுமையாக இருந்தால் திமுக ஆட்சியை நிச்சயமாக அகற்ற முடியும். பள்ளி கல்லூரிகள் முன்பு போதை பொருள் விற்பனை, பாலியல் வன்கொடுமை, லாக்கப் மரணங்கள் ஆகியவை தொடர்ந்து கொண்டிருக்கிறது. முதலமைச்சர் வெளிநாட்டுக்கு 5 முறை
சென்று விட்டார். அங்கு அதிகமான ஒப்பந்தம் போட்டதாக சொல்கிறார். வெள்ளை அறிக்கை கேட்டதற்கு தொழில்துறை அமைச்சர் எதிர்ப்பு தெரிவிக்கிறார். நாட்டில் சொத்து வரி உயர்வு மின்சார கட்டண உயர்வு சிறு தொழிற்சாலைகள் மின்சார கட்டணம் உயர்வு. இது போன்ற பல பிரச்சனைகளில் உள்ளன” என்று தெரிவித்தார்.

தொடர்ந்து, தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் பிரிந்து
கொண்டிருக்கிறார்கள் என்ற கேள்விக்கு ”அரசியலில் எதுவும் நிரந்தரம் .
தேர்தலுக்கு பல மாதங்கள் உள்ளது. கடைசி ஒரு மாதத்தில் கூட அதிகமான மாற்றங்கள் வரும். ஆட்சி மாற்றம் வரும்.  நிச்சயமாக நல்லது நடக்கும்” என அவர் தெரிவித்தார்.

முன்னதாக இன்று காலை பத்திரிக்கையாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அதிமுகவிலிருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் கட்சியில் இணைக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார்.

Tags :
ADMKlatestNewsnainar nagendransenkottayanTNBJPTNnews
Advertisement
Next Article