Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

இன்று முதல் UPI-யில் பணம் அனுப்புவது இன்னும் ஈஸி : அரசாங்கம் வெளியிட்ட முக்கிய அப்டேட்!

தேசிய பணப் பரிவர்த்தனைக் கழகமானது (NPCI) யுபிஐ பரிவர்த்தனைகளுக்கான புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
07:49 PM Oct 08, 2025 IST | Web Editor
தேசிய பணப் பரிவர்த்தனைக் கழகமானது (NPCI) யுபிஐ பரிவர்த்தனைகளுக்கான புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
Advertisement

இந்தியாவில் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளுக்கு யுனிஃபைட் பேமென்ட் இன்டர்ஃபேஸ் (UPI) அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு முக்கியமானது PIN என்னும் இரகசிய எண் ஆகும். ஆனால் இந்த PIN முறையில் பல்வேறு பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் நிகழ்ந்து வருகின்றன.

Advertisement

இந்நிலையில் தேசிய பணப் பரிவர்த்தனைக் கழகமானது (NPCI) யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு PIN நம்பருக்குப் பதிலாக பயோமெட்ரிக் அங்கீகார வசதியை (Biometric Authentication) அறிமுகப்படுத்தியுள்ளது.

இதனை மூலம் பயனர்கள் இனி பரிவர்த்தனைகளின்போது PIN நம்பருக்கு பதிலாக கைரேகை அல்லது முக அங்கீகாரம் (Face Recognition) போன்றவற்றை பயன்படுத்தலாம். இன்று (அக்டோபர் 8) முதல் நடைமுறைக்கு வந்துள்ள இந்த புதிய முறையால் இணையப் பணப் பரிவர்த்தனைகளின் பாதுகாப்பு அதிகரிக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Tags :
digitelindiaFace RecognitionlatestNewsNPCIPINUPI
Advertisement
Next Article