செம்பரம்பாக்கம் ஏரியில் உபரி நீர் வெளியேற்றம் குறைப்பு!
செம்பரம்பாக்கம் ஏரியில் உபரி நீர் வெளியேற்றம் 4,000-இல் இருந்து 400 கன அடியாக அதிரடியாக குறைக்கப்பட்டது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள சென்னையில் குடிநீர் ஆதாரமாக விளங்கும் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்வரத்து டிசம்பர் 1 ஆம் தேதி (இன்று ) காலை 1,431 கன அடியாகவும் உபரி நீர் வெளியேற்றம் 402 கன அடியாகவும் உள்ளது.
இதையும் படியுங்கள் : வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!
ஏரிக்கு நீர்வரத்து குறைந்ததால் உபரி நீர் வெளியேற்றம் குறைக்கப்பட்டுள்ளது. மேலும் தற்போது ஏரியின் நீர்மட்டம் மொத்தமுள்ள 24 அடியில் 21.65 அடியாகவும் கொள்ளளவு 3,645 மில்லியன் கன அடியில் 3,028 மில்லியன் கன அடியாகவும் உள்ளது.
வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காரணமாக சென்னை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் இப்பகுதிகளில் உள்ள ஏரிகள் நிரம்பி வருகின்றன.