Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

கனமழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் வரத்து அதிகரிப்பு!

08:22 AM Dec 04, 2023 IST | Web Editor
Advertisement

சென்னையில் கனமழை காரணமாக தொடர்ந்து நீர் தேக்ககங்கள் வேகமாக நிரம்பி வருகின்றன. 

Advertisement

தொடர் மழையால் சென்னைக்கு குடிநீர் தரும் ஏரிகளான பூண்டி,  புழல்,  செம்பரம்பாக்கம் ஏரிகளில் அதிகமான நீர்வரத்து வந்து கொண்டிருக்கிறது.  காஞ்சிபுரம் மாவட்டத்தின் முக்கிய ஏரியாக உள்ள செம்பரம்பாக்கம் ஏரிக்கு வரும் நீரின் அளவு தொடர்ந்து அதிகரித்து கொண்டே உள்ளது.

செம்பரம்பாக்கம்  ஏரியின் மொத்த கொள்ளளவு 3,645 மில்லியன் கன அடியில் தற்போது 2,944 நீர் இருப்பு உள்ளது. அதன் மொத்த உயரம் 24 அடியில் தற்போது 21.34 அடி நீர் இருப்பு உள்ளது.

இதையும் படியுங்கள் : மிக்ஜாம் புயல் – விமான சேவைகள் பெருமளவு பாதிப்பு!

மேலும், செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர் வரத்து வினாடிக்கு 6,881 கன அடியாக அதிகரித்துள்ளது. மேலும், செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து 3,131 கன அடி உபரி நீர்  வெளியேற்றப்படுகிறது.

சென்னை  குடிநீர் வழங்கும் முக்கிய நீர்த்தேக்கங்களில் தொடர் கனமழை காரணமாக வேகமாக நிரம்பி வருகின்றன அதன் விவரம் :

புழல் ஏரியின் நீர் தேக்கம் அதன் மொத்த கொள்ளளவு 3,300 மில்லியன் கன அடியில் தற்போது 2,910 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது. அதன் மொத்த உயரம் 21.20 அடியில் தற்போது 19.49அடி உயரம் நீர் இருப்பு உள்ளது.  மேலும், ஏரியின் நீர்வரத்து 5,777 கன அடி வினாடிக்கு வந்து கொண்டிருக்கிறது. ஏரியிலிருந்து உபரி நீர் 2,189 கன அடி வெளியேற்றப்படுகிறது.

சோழவரம் நீர் தேக்கம் அதன் மொத்த கொள்ளளவு 1,081 மில்லியன் கன அடியில் தற்போது 881 மில்லியன் கன அடி நீர் உள்ளது. அதன் மொத்த உயரம் 18.86அடியில் தற்போது 17.86 நீர் இருப்பு உள்ளது. ஏரியின் நீர் வரத்து வினாடிக்கு 4,506 கன அடி வந்து கொண்டிருக்கிறது நீர் வெளியேற்றம் 2,562 கன அடி வெளியேற்றப்படுகிறது.

பூண்டி நீர்த்தேக்கம் அதன் மொத்த கொள்ளளவு 3,231 மில்லியன் கன அடியில் தற்போது 2,580 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது. அதன் மொத்த உயரம் 35 அடியில் தற்போது 33.20 அடி நீர் இருப்பு உள்ளது. ஏரியின் நீர் வரத்து வினாடிக்கு 3,950 கன அடி வந்து கொண்டிருக்கிறது. மேலும் பேபி கால்வாய் வழியாக 25 கன அடி வினாடிக்கு அனுப்பப்படுகிறது.

Tags :
andhrapradeshChennaiCycloneCycloneMichaungHeavy rainHeavyRainfallincreasesMichaungRedAlertSembarambakkam LakeTamilNaduwater levelWeatherForecast
Advertisement
Next Article