For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

அயோத்தி ராமர் கோயில் பிரசாதம் என்ற பெயரில் போலி பிரசாதம் விற்பனை.. அமேசானுக்கு பறந்த நோட்டீஸ்!

11:05 AM Jan 20, 2024 IST | Web Editor
அயோத்தி ராமர் கோயில் பிரசாதம் என்ற பெயரில் போலி பிரசாதம் விற்பனை   அமேசானுக்கு பறந்த நோட்டீஸ்
Advertisement

அயோத்தி ராமர் கோயில் பிரசாதம் என்ற பெயரில் அமேசான் போலியான பிரசாதத்தை விற்பனை செய்வதாக அந் நிறுவனத்திற்கு மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

Advertisement

அயோத்தி ராமர் கோயில் பிரதிஷ்டை விழா நாளை மறுநாள் நடைபெற உள்ளது.  அன்று பிரதமர் மோடி குழந்தை ராமர் சிலையை திறந்து வைக்க உள்ளார்.  இந்த நிகழ்விற்கு பல முக்கிய தலைவர்கள்,  பிரமுகர்கள் என பலருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில்,  பல உணவு நிறுவனங்கள் ஆன்லைனில் அயோத்தி ராமர் கோயில் பிரசாதம் என்ற பெயரில் போலியான பிரசாதத்தை விற்பனை விற்பனை செய்வதாக இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையத்திடம் புகார் அளித்தது.  இதையடுத்து, அமேசான் நிறுவனத்திற்கு மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் (சிசிபிஏ) நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 7 நாட்களுக்குள் அமேசான் நிறுவனம் இதுகுறித்து பதிலளிக்க வேண்டும் என்றும் அந்த நோட்டீஸில் தெரிவித்துள்ளது.

அப்படி பதிலளிக்க தவறும்பட்சத்தில், நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம், 2019 இன் விதிகளின் கீழ் அமேசான் நிறுவனத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளது.

ராமர் கோயில் அயோத்தி பிரசாதம் என்ற பெயரில் பல்வேறு இனிப்புகள்/உணவு பொருட்கள் விற்பனைக்கு உள்ளதாக  நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது. குறிப்பாக அயோத்தி ராமர் கோயில் நெய் லட்டு,  பால் பேடா போன்ற இனிப்புகள் விற்பனைக்கு கிடைக்கிறது.  இது நுகர்வோர் பாதுகாப்பு விதிகள், 2020 இன் விதி 4(3) இன் கீழ், எந்தவொரு மின்வணிக நிறுவனமும் எந்தவொரு நியாயமற்ற வர்த்தக நடைமுறையையும் கடைப்பிடிக்கக் கூடாது.

நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம்,  இதுபோன்ற தயாரிப்பு அல்லது சேவையை 'தவறான விளம்பரங்களை' தடை செய்கிறது.  அல்லது அத்தகைய தயாரிப்பு அல்லது சேவையின் தன்மை,  பொருள்,  அளவு அல்லது தரம் குறித்து நுகர்வோரை தவறாக வழிநடத்தும் அல்லது தவறான உத்தரவாதத்தை அளிக்கிறது என நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் தெரிவித்துள்ளது.

இதனிடையே,  அமேசான் நிறுவனம் தங்கள் கொள்கைகளின்படி "தகுந்த நடவடிக்கைகளை எடுத்து வருவதாக தெரிவித்துள்ளது.  அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ சில விற்பனையாளர் மூலம் தவறான பெயரில் விற்கப்படும் பொருட்கள் தொடர்பாக மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையத்திடம் (CCPA) இருந்து எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது.  எங்கள் கொள்கைகளின்படி இதுபோன்ற புகார்களுக்க்கு எதிராக நாங்கள் தகுந்த நடவடிக்கை எடுத்து வருகிறோம்" என்று தெரிவித்துள்ளது.

Advertisement