#BiggBoss8 - சப்பாத்தியில் அதிக உப்பு | ஜாக்குலினை உருவ கேலி செய்த சௌந்தர்யா! வலுக்கும் கண்டனம்!
பிக்பாஸ் சீசன் 8 தொடரில் நடிகை ஜாக்குலினை உருவ கேலி செய்த செளந்தர்யாவுக்கு சமூக வலைதளங்களில் எதிர்ப்புகள் அதிகரித்துள்ளன.
பிக்பாஸ் தமிழ் சீசன் 8 தற்போது நடைபெற்று வருகிறது. கடந்த 2017ம் ஆண்டு முதல் தனியார் தொலைகாட்சியில் பிக்பாஸ் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. கடந்த ஏழு சீசன்களாக நடிகர் கமல் இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தார். ஆனால் தற்போது கமலுக்கு பதிலாக இந்த சீசனை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகின்றார். எதார்த்தமா, தனித்துவமான ஸ்டைலில் விஜய் சேதுபதி பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.
பிக்பாஸ் 8வது சீசனின் 17வது நாளான நேற்று (அக். 23) ஹோட்டல் டாஸ்க் நடைபெற்றது. இதில் ஆண்கள் அனைவரும் ஹோட்டல் ஊழியர்களாகவும், பெண்கள் அனைவரும் வாடிக்கையாளர்களாகவும் நடிக்க வேண்டும். நேற்று ஹோட்டல் ஊழியர்களாக பெண்கள் இருந்தனர். ஆண்கள் வாடிக்கையாளர்களாக இருந்தனர். இதனைத் தொடர்ந்து இன்று பெண்கள் வாடிக்கையாளர்களாக போட்டியில் பங்கேற்றனர். இதில் சப்பாத்தி சாப்பிட்ட செளந்தர்யா, அது உப்பாக இருந்ததால் ஹோட்டல் ஊழியரை அழைத்து கண்டித்துள்ளார். "நான் சாப்பிடுவதே ஒரே ஒரு சப்பாதி. அதுவும் உப்பாக இருந்தால், என் முகம் அவங்க முகம் மாதிரி ஆகிவிடும்" என ஜாக்குலினை சுட்டிக்காட்டி பேசினார்.
இதையும் படியுங்கள் : நாடாளுமன்ற பொதுக் கணக்குக் குழு விசாரணைக்கு ஆஜராகாத #MadhabiPuri… அடுத்த கட்ட நடவடிக்கை என்ன?
இதனால் கோபமடைந்த ஜாக்குலின், "இனிமேல் காமெடிக்குக் கூட அப்படி சொல்லாதிங்க, எனக்கு பிடிக்கவில்லை" என செளந்தர்யாவிடம் கோபித்துக் கொண்டார். "கொஞ்சம் கவனமாக இருங்க செளந்தர்யா" என ஜாக்குலின் அறிவுறுத்தினார். ஒரே வார்த்தையை அடிக்கடி கூறி அழுத்தமாக பதிவு செய்யாதே என செளந்தர்யா ஜாக்குலினை எச்சரித்தார். எனினும் உருவ கேலி என்பது ஏற்றுக்கொள்ள முடியாதது என பிக்பாஸ் வீட்டில் உள்ளவர்களே செளந்தர்யாவுக்கு எதிராக மாறியுள்ளனர். இதனிடையே, பிக்பாஸ் தொடரில் நடிகை ஜாக்குலினை உருவ கேலி செய்த செளந்தர்யாவுக்கு சமூக வலைதளங்களில் எதிர்ப்புகள் அதிகரித்துள்ளன. இதற்கு முன்பும் ஜாக்குலினை செளந்தர்யா கேலி செய்ததாக கூறப்படுகிறது.