"பிரிவு 498A, குடும்ப வன்முறைச் சட்டங்கள் தவறாகப் பயன்படுத்தப்படுகின்றன" - #SupremeCourt
திருமணமான பெண்களுக்கு எதிரான கொடுமைகளைக் குறிப்பிடும் (ஐபிசி) பிரிவு 498 ஏ மற்றும் குடும்ப வன்முறைச் சட்டத்தின் விதிகள் நாட்டில் மிகவும் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சட்டங்களில் ஒன்றாகும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
திருமணமான பெண்களுக்கு எதிரான கொடுமைகளைக் குறிப்பிடும் இந்திய தண்டனைச் சட்டத்தின் (ஐபிசி) பிரிவு 498 ஏ மற்றும் குடும்ப வன்முறைச் சட்டத்தின் விதிகள் ஆகியவை நாட்டில் மிகவும் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சட்டங்களில் ஒன்றாகும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. நீதிபதி பி.ஆர்.கவாய், நீதிபதி பிரசாந்த் குமார் மிஸ்ரா, நீதிபதி கே.வி.விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு, ஜீவனாம்சம் தொடர்பான திருமண தகராறு மீதான விசாரணையின் போது இதனைத் தெரிவித்தது.
ஐபிசியின் 498A பிரிவு நீண்ட காலமாக விவாதத்திற்கு உட்பட்டது. அதன் தவறான பயன்பாடு குறித்து பலர் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகிறது. பெண்கள் தங்கள் கணவர்கள் மற்றும் மாமியார் மீது குற்றவியல் வழக்குகளில் பொய்யாக குற்றம் சாட்டுகிறார்கள். நாடு முழுவதும் உள்ள பல்வேறு நீதிமன்றங்கள் இதை தெரிவித்து வருகின்றன.
இதையும் படியுங்கள் ; இந்தியா -வங்கதேசம் இடையேயான 2ம் நாள் டெஸ்ட் போட்டி | #Ticket விற்பனை தொடக்கம்!
இந்நிலையில், உச்சநீதிமன்றம் பிரிவு 498A தவறாகப் பயன்படுத்துவதை எடுத்துக்காட்டியது. பிரிவு 498A இன் கீழ் குற்றத்தை பதிவு செய்தால் பல வழக்குகளை சுமுகமாக தீர்க்க முடியும் என்று உச்சநீதிமன்றம் பரிந்துரைத்தது.