இரண்டாவது டி 20 போட்டி ; இந்தியாவுக்கு 214 ரன்கள் இலக்கு நிர்ணயித்த தென் ஆப்பிரிக்கா...!
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. முதல் டி 20 போட்டியில் இந்திய அணி 101 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை விழ்த்தியது. இதையடுத்து இரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி 20 போட்டியானது, இன்று பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் நடைபெற்று வருகிறது.
இதில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனை தொடர்ந்து களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 213 ரன்கள் குவித்துள்ளது. அந்த அணியில் அதிகபட்சமாக தொடக்க வீரர் குவிண்டன் டி காக் 46 பந்துகளில் 90 ரன்கள் விளாசினார். இந்திய அணி சார்பில் வருண் சக்கரவர்த்தி 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதனை தொடர்ந்து 214 ரன்கள் அடித்தால் வெற்றி என்கிற இமாலய இலக்கை விரட்டி இந்திய அணி களமிறங்க உள்ளது.