இரண்டாம் கட்ட நேர்காணல்... நாளை கட்சி நிர்வாகிகளை சந்திக்கும் விஜய்!
பனையூரில் உள்ள தலைமை அலுவலகத்தில் தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகளிடம் இரண்டாம் கட்டமாக நாளை நேர்காணல் நடத்துகிறார் தவெக தலைவர் விஜய்.
10:12 PM Jan 26, 2025 IST | Web Editor
Advertisement
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவரான விஜய் கடந்தாண்டு பிப்ரவரியில் தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை தொடங்கினார். தொடர்ந்து கட்சியின் கொடி அறிமுகம், பாடல் அறிமுகம், முதல் மாநாடு ஆகியவை நடைபெற்றது. தொடர்ந்து சட்டமன்ற தேர்தலுக்கான பணியில் கட்சியினர் தீவிரமாக ஈடுப்பட்டு வருகின்றனர். அதன் ஒருபகுதியாக மாவட்ட வாரியாக நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு வருகின்றனர்.

இதுதொடர்பாக சென்னை பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் முதற்கட்டமாக 19 கழக மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகளை நாளை (ஜன.27) தவெக தலைவர் விஜய் சந்திக்கவுள்ளார்.
இந்த சந்திப்பில் தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகளிடம் இரண்டாம் கட்டமாக நேர்காணல் நடத்துகிறார் விஜய்.
Advertisement