இரண்டாவது ஒரு நாள் போட்டி : டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பந்து வீச்சு தேர்வு
தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பணம் மேற்கோண்டுள்ளது. இதில் முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் தென் ஆப்பிரிக்க அணி 2-0 என்ற கணக்கில் தொடரை முழுமையாக கைப்பற்றியது. இதனை தொடர்ந்து இரு அணிகளும் ஒரு நாள் போட்டிகளில் விளையாடி வருகின்றது.
கடந்த 30 ஆம் தேதி ராஞ்சியில் நடைபெற்ற முதல் ஒரு நாள் போட்டியில் தென் ஆப்பிரிக்காவை 17 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வீழ்த்தியது. இதனை தொடர்ந்து இரு அணிகளுக்கும் இடையிலான 2-வது ஒரு நாள் போட்டி சத்தீஷ்கர் மாநிலம் ராய்ப்பூரில் இன்று நடைபெறுகிறது.
டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து இந்திய அணி களமிரங்க உள்ளது.
அணி விவரம்
இந்தியா ; கே.எல்.ராகுல் (கேப்டன் & விக்கெட் கீப்பர்), ரோஹித் ஷர்மா, யஷஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி, ருதுராஜ் கெய்க்வாட், வாஷிங்டன் சுந்தர், ரவீந்திர ஜடேஜா, ஹர்ஷித் ராணா, குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங், பிரசித் கிருஷ்ணா.
தென் ஆப்பிரிக்கா ; டெம்பா பாவுமா (கேப்டன்), ஐடன் மார்க்ராம், குயின்டன் டி காக் (விக்கெட் கீப்பர்), மேத்யூ ப்ரீட்ஸ்கே, டோனி டி ஜோர்ஜி, டெவால்ட் ப்ரீவிஸ், மார்கோ ஜான்சன்,கார்பின், போஷ், கேசவ் மகாராஜ், நான்ரே பர்கர், லுங்கி நிகிடி