For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

திருச்செந்தூர் கோயில் கடற்கரையில் கடல் ஆரத்தி - பல்லாயிரக்கணக்கான பெண்கள் விளக்கேற்றி வழிபாடு!

06:45 AM Jun 22, 2024 IST | Web Editor
திருச்செந்தூர் கோயில் கடற்கரையில் கடல் ஆரத்தி   பல்லாயிரக்கணக்கான பெண்கள் விளக்கேற்றி வழிபாடு
Advertisement

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கடற்கரை பகுதியில் ஆடி மாத குபேர
பௌர்ணமியை முன்னிட்டு சமுத்திர ஆரத்தி நடைபெற்றது.  இதில் பல்லாயிரக்கணக்கான பெண்கள் கடற்கரையில் அமர்ந்து விளக்கேற்றி ஆரத்தி எடுத்து வழிபட்டனர்.

Advertisement

முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் சிறந்த பரிகார ஸ்தலமாக விளங்குகிறது.
மாதந்தோறும் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு இக்கோயில் கடற்கரையில் உள்ள சந்தோசம் மண்டபத்தில் கடல் ஆரத்தி நடைபெறுவது வழக்கம்.  அதே நேரத்தில் ஆனி மாதம் வரக்கூடிய பௌர்ணமி குபேர பௌர்ணமி ஆக கருதப்படுகிறது.

இந்த பௌர்ணமி தினத்தில் வழிபாடு நடத்தினால் நினைத்த காரியம் நிறைவேறும் என்று நம்பப்படுகிறது.  அந்த வகையில் குபேர பௌர்ணமியை முன்னிட்டு சுப்பிரமணிய சுவாமி கோயில் கடற்கடை பகுதியில் பால், பன்னீர், சந்தனம், தேன் உள்ளிட்ட 16 வகையான சமுத்திர அபிஷேகம் நடைபெற்றது.

இதனையடுத்து சந்தோச மண்டபத்தில் சிறப்பு பூஜை நடைபெற்றது.   தொடர்ந்து கடல் ஆரத்தி நடைபெற்றது.  இதில் பல்லாயிரக்கணக்கான பெண்கள் கடற்கரை மணலில் அமர்ந்து விளக்கேற்றி கடல் ஆரத்தி எடுத்து வழிபாடு நடத்தினர்.

Tags :
Advertisement