2032ல் பூமிக்கு ஆபத்தா? YR4 விண்கல் குறித்து விஞ்ஞானிகள் கூறுவது என்ன?
கடந்த ஆண்டு டிச.27 உள்ள ஒரு தொலைநோக்கி மூலம் இந்த விண்கல் கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால், 2032ம் ஆண்டு இது பூமியை தாக்க வாய்ப்பு இருக்கிறது என ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
இந்த விண்கல் பூமியைத் தாக்குவதற்கான வாய்ப்பு 1.3%, முதல் 99% ஆபத்தில்லாமல் பூமியைக் கடந்துவிடும் என்று அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா கடந்த வாரம் கூறியிருந்தது. இருந்தாலும் அதன் நகர்வைத் தொடர்ந்து கண்காணித்து வரும் ஆய்வாளர்கள் YR4 விண்கல் பூமியைத் தாக்கும் வாய்ப்பு 2.3% என்று தற்போது தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், 130 முதல் 300 அடிவரை குறுக்களவு கொண்ட அந்த விண்கல் பூமியைத் தாக்கினாலும் பூமியில் மனித குலம் அழிந்துவிடாது. ஆனால் விழுந்த இடத்தில் நிலப்பரப்பு அழியக்கூடும் என்று கூறப்படுகிறது. இந்த மோதலை முன்கூட்டியே கணிப்பதன் மூலம் மக்களை அப்பகுதியிலிருந்து வெளியேற்ற முடியும் என்று விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.