திட்டமிட்டபடி நாளை பள்ளிகள் திறக்கும் - பள்ளிக் கல்வித் துறை அறிவிப்பு!
அரையாண்டு விடுமுறையைத் தொடர்ந்து திட்டமிட்டப்படி நாளை பள்ளிகள் திறக்கும் என பள்ளிக் கல்வித் துறை இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் மெட்ரிக் பள்ளிகளுக்கு கடந்த டிச. 23-ஆம் தேதியுடன் அரையாண்டு தேர்வுகள் முடிவடைந்தது. இதனையடுத்து டிச. 24 முதல் முதல் புத்தாண்டு விடுமுறையும் சேர்த்து இன்றுவரை (ஜன.1) அரையாண்டு விடுமுறையாக விடப்பட்டது. தொடர்ந்து நாளை பள்ளிகள் திறக்கும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்தது.
இதனிடையே பள்ளி வேலை நாட்கள் இந்த வாரத்தில் 2 ( வியாழன், வெள்ளி) நாட்கள் மட்டுமே இருப்பதால், சனி, ஞாயிறு சேர்த்து 4 நாட்கள் மீண்டும் விடுமுறை அளிக்கப்படும் என தகவல்கள் பரவி வந்தன. இதனால் மாணவர்கள் உற்சாகத்தில் இருந்து வந்தனர். இந்நிலையில், அரையாண்டு விடுமுறை முடிந்து நாளை (ஜன.2) திட்டமிட்டபடி பள்ளிகள் திறக்கும் என பள்ளிக் கல்வித்துறை இயக்குநரகம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.