Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

அரையாண்டு தேர்வு விடுமுறைக்கு பின் இன்று பள்ளிகள் திறப்பு !

07:10 AM Jan 02, 2025 IST | Web Editor
Advertisement

தமிழ்நாட்டில் அரையாண்டு தேர்வு விடுமுறை முடிந்து இன்று அனைத்து பள்ளிகளும் திறக்கப்படவுள்ளது.

Advertisement

தமிழ்நாட்டில் 1 முதல் 12ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு 3 பருவங்களாக பாடங்கள் நடத்தப்படுகிறது. பருவ இறுதியில் தேர்வுகள் நடத்தப்பட்டு விடுமுறையும் அறிவிக்கப்படுகின்றன. அந்த வகையில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் கடந்த டிசம்பர் 9-ம் தேதி துவங்கி டிசம்பர் 23-ம் தேதி வரை அரையாண்டு தேர்வுகள் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து 24-ம் தேதி முதல் ஜனவரி 1-ம் தேதி வரை அரையாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து அனைத்து பள்ளிகளும் ஜனவரி 2-ந்தேதி மீண்டும் திறக்கப்படும் என்று தமிழக பள்ளிக் கல்வித்துறை அறிவித்து இருந்தது. இதன் மூலம் மாணவர்களுக்கு 9 நாட்கள் அரையாண்டு விடுமுறை கிடைத்தது. இந்நிலையில் நேற்று அரையாண்டு விடுமுறை நீடிக்கப்படுவதாக தவறான தகவல் பரவிய நிலையில், அது வதந்தி என்றும், இன்று திட்டமிட்டப்படி பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் அரையாண்டு தேர்வு விடுமுறை முடிந்து இன்று திறக்கப்படவுள்ளது. மேலும் 'பெஞ்ஜல்' புயல் தாக்கத்தால், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் நடத்தப்பட இருந்த அரையாண்டு தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் தேர்வு ஒத்திவைக்கப்பட்ட மாவட்டங்களில் இன்று முதல் வருகிற 10-ந்தேதி வரை அரையாண்டு தேர்வுகள் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags :
Christmasexamhalf-yearlyNewYearReOpenSchoolstamil nadutodayVacation
Advertisement
Next Article