அரையாண்டு விடுமுறை முடிந்து இன்று பள்ளிகள் திறப்பு!
அரையாண்டுத் தோ்வு விடுமுறை திங்கள்கிழமையுடன் நிறைவடைந்த நிலையில், தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் செயல்பட்டு வரும் அனைத்துப் பள்ளிகளும் செவ்வாய்க்கிழமை (ஜன.2) திறக்கப்படவுள்ளன.
தமிழகத்தில் 1 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த டிசம்பர் மாதம் அரையாண்டு தேர்வு நடைபெற்ற நிலையில் டிசம்பர் 22ஆம் தேதி தேர்வுகள் நிறைவடைந்தது. இதனைத் தொடர்ந்து டிசம்பர் 23 முதல் ஜனவரி ஒன்று வரை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறைகள் அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் அரையாண்டு தேர்வு விடுமுறை நிறைவடைந்து தமிழகம் முழுவதும் இன்று அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட உள்ளன. அதேசமயம் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பள்ளிகளில் கட்டிடங்களின் தரத்தை ஆய்வு செய்து அதன் பிறகு பள்ளி மாணவர்களை அனுமதிக்க வேண்டும் எனவும் அரையாண்டு தேர்வு ஒத்திவைக்கப்பட்ட பள்ளிகளில் மாணவர்களுக்கு பள்ளிகள் திறந்த உடன் அரையாண்டு தேர்வு நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது