For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

#SchoolLeave | கனமழை எதிரொலி... எந்தெந்த மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை?

06:41 AM Nov 27, 2024 IST | Web Editor
 schoolleave   கனமழை எதிரொலி    எந்தெந்த மாவட்டங்களில் இன்று பள்ளி  கல்லூரிகளுக்கு விடுமுறை
Advertisement

கனமழை காரணமாக புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் இன்று (நவ.27) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டடுள்ளது.

Advertisement

தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் 8 கி.மீ வேகத்தில் தமிழக கடற்கரை நோக்கி நகர்ந்து வருகிறது. நாகப்பட்டினத்தில் இருந்து தென்கிழக்கு திசையில் சுமார் 630 கி.மீ தொலைவில் தாழ்வு மண்டலம் அமைந்துள்ளது.இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று (நவ.,27) புயலாக மாறுகிறது.

இந்த புயலுக்கு ஃபெங்கால் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த புயல் அடுத்த 2 நாட்களில் தமிழக – இலங்கை கடற்கரை நோக்கி நகரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டின் பல பகுதிகளில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் நகர்வு காரணமாக, தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்யும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவடைந்து வருவதால், அடுத்த ஐந்து நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் நாகை, கடலூர், திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

கனமழை காரணமாக திருவள்ளூர், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், ராமநாதபுரம், திருச்சி ஆகிய மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதேபோல், புதுச்சேரி மாநிலத்தில் காரைக்கால் மற்றும் புதுச்சேரிக்கும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை, அரியலூர் ஆகிய மாவட்டங்களிலும், கொடைக்கானல் தாலுகாவிலும் இன்று (நவ.27) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement