#SchoolLeave | தொடர் கனமழை... குன்னூர் தாலுகாவில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை!
தொடர் கனமழை காரணமாக குன்னூர் வட்டத்தில் (தாலுகா) உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (நவ.04) விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு அறிவித்துள்ளார்.
தென் தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் அதனையொட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழ்நாட்டில் நவ.9 ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாட்டில் ஒருசில இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்து வருகிறது. இதற்கிடையே, நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக மழை வெளுத்து வாங்கியது.
இதையும் படியுங்கள் : #Wayanad நிலச்சரிவில் மாயமான நபரின் உடல் பாகம் கண்டெடுப்பு? வெளியான அதிர்ச்சித் தகவல்!
நேற்று (நவ.3) பெய்த கனமழையால், குன்னூா்-மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் காட்டேரி உள்ளிட்ட சில இடங்களில் மண்சரிவு ஏற்பட்டதுடன், மரங்களும் முறிந்து விழுந்தன.இதனால், அப்பகுதியில் போக்குவரத்து சேவை பாதிக்கப்பட்டுள்ளது. தொடர் கனமழையால், அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் குன்னூரில் 10 செ.மீ மழை பெய்துள்ளது.
மேலும் நீலகிரி மாவட்டம் குந்தாவில் 4.2 செ.மீ, அருப்புக்கோட்டையில் 2.8 செ.மீ மழை பதிவாகியுள்ளது. இந்நிலையில், குன்னூரில் இன்று (நவ.4) காலை முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, குன்னூர் வட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (நவ.04) விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு அறிவித்துள்ளார்.