For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

#SchoolBooks விலை லாப நோக்கத்திற்காக உயர்த்தப்படவில்லை" – அமைச்சர் அன்பில் மகேஸ் தகவல்!

02:52 PM Aug 14, 2024 IST | Web Editor
 schoolbooks விலை லாப நோக்கத்திற்காக உயர்த்தப்படவில்லை   – அமைச்சர் அன்பில் மகேஸ் தகவல்
Advertisement

அரசு பாடப்புத்தகங்களின் விலை லாப நோக்கத்திற்காக உயர்த்தப்படவில்லை என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

Advertisement

தமிழ்நாடு மாநில பாடப்புத்தகங்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. 5 ஆண்டுகளுக்கு பின்னர் ரூ.40 முதல் ரூ.90 வரை விலை உயர்த்தப்பட்டுள்ளது. மூலப் பொருட்களில் விலை அதிகரிப்பு காரணமாகத்தான் இந்த விலை உயர்த்தப்பட்டிருக்கிறது என பள்ளிக்கல்வித் துறை விளக்கமளித்துள்ளது.

தமிழ்நாடு பாடநூல் கழகம் சார்பில் அச்சிடப்படும் இப்புத்தகங்கள், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு விலையில்லாமல் வழங்கப்படுகிறது. தனியார் பள்ளிகளுக்கு மற்றும் போட்டித் தேர்வர்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில் இந்த விலையேற்றத்தை அரசு திரும்பப் பெற வேண்டும் என தனியார் பள்ளி சங்கங்களின் கூட்டமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.

காகித விலை, அச்சுக்கூலி உயர்ந்தால் பாடப் புத்தகங்களின் விலையை 5 முதல் 10 சதவீதம் வரை உயர்த்தலாம். ஆனால் தமிழ்நாடு பாடநூல் கழகம் ஒரே அடியாக பாடப் புத்தகங்களின் விலையை 40 சதவீதம் உயர்த்தியுள்ளது. 1 ஆம் வகுப்பு பழைய விலை 390 ரூபாய், புதிய விலை 550 ரூபாய். 3 ஆம் வகுப்பு பழைய விலை 430 ரூபாய், புதிய விலை 620 ரூபாய். 5 ஆம் வகுப்பு பழைய விலை 510 ரூபாய், புதிய விலை 710 ரூபாய். 10 ஆம் வகுப்பு பழைய விலை 790 ரூபாய், புதிய விலை 1,130 ரூபாய்.

இதையும் படியுங்கள் : மோசமான #HeatExposure – கோடிக்கணக்கான குழந்தைகள் பாதிப்பு என ஐநா கவலை!

இது தொடர்பாக அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறியாதாவது :

"பாடப்புத்தகத்தின் மேல் அட்டை, காகிதம் மற்றும் அச்சுக்கூலி உள்ளிட்வைகளின் விலை உயர்வின் காரணமாக பாடப்புத்தகம் தயாரிப்பதற்கு ஆகும் செலவினை ஈடுகட்டுவதற்காக மட்டுமே பாடநூல்கள் விலை உயர்த்தப்பட்டது. இந்த விலை உயர்வு லாப நோக்கத்திற்காக உயர்த்தப்படவில்லை"

இவ்வாறு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement