For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

100% வாக்களிப்பதை வலியுறுத்தி மாதிரி வாக்குப்பதிவு நடத்திய பள்ளி மாணவர்கள்!

03:01 PM Mar 29, 2024 IST | Web Editor
100  வாக்களிப்பதை வலியுறுத்தி மாதிரி வாக்குப்பதிவு நடத்திய பள்ளி மாணவர்கள்
Advertisement

தஞ்சாவூர் மாவட்டம்,  பேராவூரணி அருகே உள்ள வீரியங்கோட்டை- உடையநாடு ராஜராஜன் நர்சரி,  பிரைமரி பள்ளியில் பயிலும் மாணவர்களின் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது.

Advertisement

தஞ்சாவூர் மாவட்டம்,  பேராவூரணி அருகே உள்ள வீரியங்கோட்டை- உடையநாடு ராஜராஜன் நர்சரி பிரைமரி பள்ளியில் 1500 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் எல்கேஜி முதல் 5 ம் வகுப்பு வரை படித்து வருகின்றனர்.  இப்பள்ளி மாணவர்கள் வாக்களிப்பதன் அவசியம் குறித்து பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாதிரி வாக்குப்பதிவு நடத்தினர்.  அந்த வகையில் வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்வது, சின்னம் ஒதுக்கீடு செய்து பிரச்சாரம் செய்வது போன்று செய்து காட்டினர்.

இதனைத் தொடர்ந்து மாணவர்களே வாக்குப்பதிவு அலுவலர்களாக செயல்பட்டு,  வாக்காளர் பெயர் பதிவு செய்து வாக்கு சீட்டு வழங்குவது,  அதன் பின்னர் அனைவரும் வரிசையில் நின்று,  கை விரலில் மை வைத்து மறைவிடத்தில் தங்களுக்கு பிடித்த வேட்பாளரின் சின்னத்தில் வாக்களித்து செல்வது என தத்துரூபமாக செய்து காட்டி அசத்தினர்.

இது குறித்து பள்ளியின் தாளாளர் மணோன்மணி ஜெய்சங்கர் கூறியதாவது:
"வரும் நாடாளுமன்றத் தேர்தலில் 100 சதவீதம் வாக்காளிக்க வலியுறுத்தியும்,  நேர்மையுடன் அனைவரும் வாக்குச்சாவடி சென்று வாக்களிக்க வேண்டும் என பெற்றோர்களுக்கு குழந்தைகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக இந்த மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது" என்றார்.

Tags :
Advertisement