For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

#SAvsIND - சதமடித்து அணியை சரிவிலிருந்து மீட்ட திலக் வர்மா... டி20 போட்டிகளில் புதிய சாதனை படைத்த இந்தியா!

07:13 AM Nov 14, 2024 IST | Web Editor
 savsind   சதமடித்து அணியை சரிவிலிருந்து மீட்ட திலக் வர்மா    டி20 போட்டிகளில் புதிய சாதனை படைத்த இந்தியா
Advertisement

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3வது டி20 போட்டியில், 11 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றிப் பெற்றது.

Advertisement

தென் ஆப்பிரிக்கா, இந்தியா இடையிலான 3வது டி20 போட்டி தென்னாப்பிரிக்கா நாட்டின் செஞ்சூரியனில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில், 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 219 ரன்களை குவித்தது. இந்திய அணி தரப்பில், தொடக்க ஆட்டக்காரரான அபிஷேக் சர்ஷா அரைசதம் அடித்து ஆட்டமிழந்தார். திலக் வர்மா அதிரடியாக விளையாடி, சதமடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். தென் ஆப்பிரிக்க தரப்பில் அதிகபட்சமாக ஆண்டிலே சிமிலேன், கேசவ் மகாராஜ் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதனையடுத்து 220 ரன்கள் எடுத்தால் வெற்றி என களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி, 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 208 ரன்களை எடுத்தது. இதன்மூலம் 11 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றிப் பெற்றது. இதன் மூலம் 4 போட்டிகள் கொண்ட தொடரில் 2-1 என்ற கணக்கில் தொடரை இந்தியா கைப்பற்றியது . 4வது டி20 வாண்டரர்ஸில் நாளை நடைபெறுகிறது.

மேலும் இதன்மூலம் இந்த ஆண்டில் இந்திய அணி 8-வது முறையாக டி20 கிரிக்கெட்டில் 200 ரன்களைக் கடந்து அசத்தியுள்ளது. சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில், இதுவரை எந்தவொரு அணியும், ஒரு ஆண்டில் எட்டு முறை 200 ரன்கள் அடித்ததில்லை. இந்திய அணி முதல் முறையாக இந்த சாதனையை படைத்துள்ளது.

Tags :
Advertisement