For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

#SAvsBAN டெஸ்ட் போட்டி | காயம் காரணமாக தென் ஆப்பிரிக்க அணி கேப்டன் பவுமா விலகல்!

07:43 PM Oct 11, 2024 IST | Web Editor
 savsban டெஸ்ட் போட்டி   காயம் காரணமாக தென் ஆப்பிரிக்க அணி கேப்டன் பவுமா விலகல்
Advertisement

வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் டெம்பா பவுமா விலகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. அதன்படி, இரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி வரும் அக்டோபர் 21ம் தேதி தொடங்க உள்ளது. இது டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்தத் தொடருக்கான முதல் போட்டி வங்கதேச தலைநகர் டாக்காவிலும், இரண்டாவது டெஸ்ட் போட்டி சட்டோகிராமிலும் நடைபெறவுள்ளது.

சமீபத்தில் இந்தத் தொடருக்கான 15 பேர் கொண்ட தென்னாப்பிரிக்க அணி அறிவிக்கப்பட்டது. இந்த அணிக்கு டெம்பா பவுமா கேப்டனாக நியமிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில், தென்னாப்பிரிக்க கேப்டன் டெம்பா பவுமா இடது கையில் ஏற்பட்ட காயம் காரணமாக வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்கமாட்டர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பவுமாக்கு பதிலாக எய்டன் மார்க்கரம் தென் ஆப்பிரிக்க அணியின் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், இளம் பேட்ஸ்மென் டிவால்ட் பிரேஸ்வலும் அணியில் இணைந்துள்ளார். அதே நேரத்தில், இடுப்பு எலும்பு பிரச்னையால் விலகிய நன்ரே பர்கருக்குப் பதிலாக லுங்கி இங்கிடி அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

தென்னாப்பிரிக்க அணி:

எய்டன் மார்க்ரம் (கேப்டன்), டேவிட் பெடிங்ஹாம், மேத்யூ ப்ரீட்ஸ்கே, டெவால்ட் ப்ரீவிஸ், டோனி டி ஜோர்ஜி, கேசவ் மகராஜ், வியான் முல்டர், செனுரன் முத்துசாமி, லுங்கி இங்கிடி, டேன் பேட்டர்சன், டேன் பீட், ககிசோ ரபாடா, டிரிஸ்டன் ஸ்டப்ஸ், கைல் வெர்ரின்னே, ரியான் ரிகெல்ட்சன்.

Tags :
Advertisement