For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

“நீதித்துறையை காப்பாற்றுங்கள்...” தலைமை நீதிபதிக்கு ஓய்வுபெற்ற நீதிபதிகள் கடிதம்!

02:58 PM Apr 15, 2024 IST | Web Editor
“நீதித்துறையை காப்பாற்றுங்கள்   ” தலைமை நீதிபதிக்கு ஓய்வுபெற்ற நீதிபதிகள் கடிதம்
Advertisement

ஓய்வு பெற்ற நீதிபதிகள்,  உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்டுக்கு, ‘நீதித் துறையை பாதுகாக்க வேண்டும்’ என வலியுறுத்தி கூட்டாக கடிதம் எழுதியுள்ளனர்.

Advertisement

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்டுக்கு ஓய்வு பெற்ற உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றங்களை சேர்ந்த 21 நீதிபதிகள் அடங்கிய குழுவினர்,  கூட்டாக கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர். 4 ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதிகள் உள்பட ஓய்வு பெற்ற நீதிபதிகள் குழுவினர் தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதத் தூண்டிய சம்பவங்கள் பற்றி அவர்கள் அந்த கடிதத்தில் குறிப்பிடவில்லை. ஓய்வுபெற்ற நீதிபதிகள் தீபக் வர்மா, கிருஷ்ணா முராரி, தினேஷ் மகேஸ்வரி, எம்.ஆர்.ஷா உள்ளிட்டோர் இந்த குழுவில் அடங்குவர்.

கோப்புக்காட்சி: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்

‘தேவையற்ற அழுத்தங்களிலிருந்து நீதித்துறையை பாதுகாக்க வேண்டும்' என்ற தலைப்பில் ஓய்வுபெற்ற நீதிபதிகள் எழுதியுள்ள கடிதத்தில்,

“திட்டமிடப்பட்ட அழுத்தம்,  தவறான தகவல்கள் மற்றும் பொது அவமதிப்பு ஆகியவற்றின் மூலம் நீதித்துறையை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் முயற்சிகள் சில பிரிவினரால் அதிகரித்து வருகின்றன. இத்தகைய செயலில் ஈடுபடுபவர்கள் குறுகிய அரசியல் நலன்கள், தனிப்பட்ட ஆதாயங்கள் ஆகியவற்றால் உந்தப்பட்டு நீதித்துறை மீது பொதுமக்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையை சிதைக்க முயற்சிகின்றனர்.

ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற,  உயர்நீதிமன்ற நீதிபதிகள் 21 பேர் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு எழுதிய கடிதம்

நீதிமன்றங்கள் மற்றும் நீதிபதிகளின் நேர்மை மீது சந்தேகங்களை முன்வைப்பதன் மூலம் நீதித்துறை செயல்முறைகளை திசை திருப்ப தெளிவான, ந யவஞ்சகமான முறைகளை விமர்சகர்கள் பின்பற்றுகின்றனர். இத்தகைய செயல்கள் நமது நீதித்துறையின் புனிதத்தை அவமதிப்பது மட்டுமின்றி, சட்டத்தின் பாதுகாவலர்களாகிய நீதிபதிகள் உறுதிமொழி எடுத்துள்ள நேர்மை மற்றும் பாரபட்சமற்ற கொள்கைகளுக்கு நேரடி சவால் அளிப்பதாகவும் உள்ளது.

எனவே இத்தகைய அழுத்தங்களுக்கு எதிராக நீதித்துறை பலப்படுத்தப்பட வேண்டும். நீதித்துறையின் புனிதத்தன்மை, தன்னாட்சி பாதுகாக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்" என ஓய்வுபெற்ற நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.

எதிர்க்கட்சித் தலைவர்கள் சிலருக்கு எதிரான ஊழல் வழக்கு நடவடிக்கைகள் தொடர்பாக மத்திய பாஜக அரசு மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு இடையே வார்த்தைப் போர் வெடித்துள்ளது. கைது செய்யப்பட்ட எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு நீதிமன்றத்திலும் நிவாரணம் கிடைக்காததை கட்சிகள் விமர்சித்து வருகின்றன. இச்சூழலில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு ஓய்வுபெற்ற நீதிபதிகள் கடிதம் எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags :
Advertisement