Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

சசிகுமாரின் #TouristFamily படப்பிடிப்பு நிறைவு!

02:57 PM Jan 03, 2025 IST | Web Editor
Advertisement

சசிகுமார் நடிப்பில் உருவாகி வரும் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. 

Advertisement

சசிகுமார் நடிப்பில் கடைசியாக வெளிவந்த ‘நந்தன்’ திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அதை தொடர்ந்து சசிகுமார் தற்போது ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை அறிமுக இயக்குநர் அபிஷான் ஜீவின்ந் இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தில் சசிகுமார், சிம்ரன், மிதுன் ஜெய்சங்கர், கமலேஷ், யோகி பாபு, ரமேஷ் திலக், எம்.எஸ். பாஸ்கர், பக்ஸ் என்ற பகவதி பெருமாள் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

https://x.com/MillionOffl/status/1874813918507409838

அரவிந்த் விஸ்வநாதன் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.  ஃபேமிலி என்டர்டெய்னராக தயாராகியுள்ள இந்த திரைப்படத்தை மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும் எம் ஆர் பி என்டர்டெயின்மென்ட் ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் நசரேத் பசலியான், மகேஷ் ராஜ் பசலியான், யுவராஜ் கணேசன் ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர்.

இப்படத்தின் டைட்டில் டீசர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. இந்த நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக போஸ்டர் வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது. இந்தப் படம் வருகின்ற மார்ச் மாதம் திரையரங்குகளில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

Advertisement
Next Article