‛டூரிஸ்ட் பேமிலி' பட டப்பிங் பணியில் #Sasikumar!
சசிகுமார் நடிப்பில் உருவாகும் 'டூரிஸ்ட் ஃபேமிலி' படத்தின் டப்பின் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
சசிகுமார் நடிப்பில் கடைசியாக வெளிவந்த 'நந்தன்' திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அதை தொடர்ந்து சசிகுமார் தற்போது 'டூரிஸ்ட் ஃபேமிலி' என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை அறிமுக இயக்குநர் அபிஷான் ஜீவின்ந் இயக்குகிறார். இந்த திரைப்படத்தில் சசிகுமார், சிம்ரன், மிதுன் ஜெய்சங்கர், கமலேஷ், யோகி பாபு, ரமேஷ் திலக், எம்.எஸ். பாஸ்கர், பக்ஸ் என்ற பகவதி பெருமாள் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
அரவிந்த் விஸ்வநாதன் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். ஃபேமிலி என்டர்டெய்னராக தயாராகும் இந்த திரைப்படத்தை மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும் எம் ஆர் பி என்டர்டெயின்மென்ட் ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் நசரேத் பசலியான், மகேஷ் ராஜ் பசலியான், யுவராஜ் கணேசன் ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர்.
இப்படத்தின் டைட்டில் டீசர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. இந்த நிலையில் நடிகர் சசிக்குமார் இப்படத்தின் டப்பிங் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். இதன் புகைப்படங்கள் பதிவிட்டு படக்குழு அறிவித்துள்ளது. அடுத்த ஆண்டு கோடை மாத விடுமுறையில் இப்படத்தை வெளியிட திட்டமிடப்பட்டிருப்பதாகவும் படக்குழுவினர் உற்சாகத்துடன் தெரிவித்துள்ளனர்.