Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

இந்திய அணியில் அறிமுகமான சர்ஃபராஸ் கான்! -ஆனந்த கண்ணீரில் தந்தை...

07:08 AM Feb 16, 2024 IST | Web Editor
Advertisement

அறிமுக டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்கு முன்பு தந்தையை கட்டியணைத்து ஆனந்த கண்ணீரை வெளிப்படுத்திய சர்ஃப்ரஸ் கான்.

Advertisement

குஜராத் மாநிலம் ராஜ்கோட் செளராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி நேற்று (பிப்ரவரி 15) தொடங்கியதுஅந்த வகையில் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு இந்திய அணி 326 ரன்கள் எடுத்துள்ளதுஅதன்படி, 110 ரன்களுடன் ரவீந்திர ஜடேஜாவும் 1 ரன்னுடன் குல்தீப் யாதவும் களத்தில் உள்ளனர்.

முன்னதாகஇந்த போட்டியில் அறிமுக வீரராக களம் இறங்கிய  சர்ஃபராஸ் கான் அதிரடியாக விளையாடினார். 66 பந்துகள் களத்தில் நின்ற அவர் 9 பவுண்டரிகள் 1 சிக்ஸர் உட்பட மொத்தம் 62 ரன்கள் எடுத்தார்அப்போது ஜடேஜாவின் செயலால் ரன் அவுட் ஆனார்அதாவது,  ஜடேஜா 99 ரன்கள் எடுத்த போது 1 ரன்னை எடுத்து சதத்தை பதிவு செய்வதற்கு திணறிக்கொண்டிருந்தார்

அப்போது வீசப்பட்ட பந்தை அடித்த ஜடேஜா 100 வது ரன்னை எடுக்க பாதி தூரம் வரையில் ஓடி வந்து விட்டார்ஜடேஜா ஓடிவருவதை பார்த்த சர்ஃபராஸ் கானும் பந்து எங்கே செல்கிறது என்பதை கவனிக்காமல் பாதி தூரம் ஓடிவிட்டார்அப்போது பந்து பில்டரின் கையில் சென்றதை உணர்ந்த ஜடேஜா அப்படியே நின்றுவிட்டார். ஜடேஜாவின் இந்த செயலால் பாதியிலே சிக்கிக் கொண்டு மீண்டும் கிரீசுக்கு செல்வதற்கு முன்பு ரன் அவுட் ஆனார் சர்ஃபராஸ் கான்.

இந்நிலையில் நீண்டகால காத்திருப்புக்கு விடை கிடைக்கும் வகையில், அஜித் அகர்கர் தலைமையிலான தற்போதைய தேர்வுக்குழு விராட் கோலி மற்றும் கேஎல் ராகுல் கிடைக்காததால் சர்பராஸ் கானை அணிக்குள் எடுத்துவந்தது. சர்ஃபராஸ் கானை இந்திய அணியில் தேர்வுசெய்த நிலையில், சர்ஃபராஸின் மனைவி மற்றும் அவரது தந்தை நௌஷாத் கானும் போட்டி நடக்கும் முன்பு வந்திருந்தனர். சர்ஃபராஸின் அறிமுக தொப்பியைப் பார்த்ததும் நவ்ஷத் கான் கண்களில் கண்ணீர் பெருகியது, இந்த தருணத்தின் படங்கள் மற்றும் வீடியோக்களும் இணையத்தில்,  பரவலாக விவாதிக்கப்பட்டன.

Advertisement
Next Article