சச்சின் டெண்டுல்கரின் தொண்டு நிறுவனம் - இயக்குநரானார் சாரா டெண்டுல்கர்!
சச்சின் டெண்டுல்கர் அறக்கட்டளையின் இயக்குநராக சாரா டெண்டுல்கர் பொறுப்பேற்றுள்ளார்
24 ஆண்டுகள் கிரிக்கெட் உலகை கட்டியாண்ட இந்திய கிரிக்கெட் அணியின் பிதாமகன்… லிட்டில் மாஸ்டர்… மாஸ்டர் பிளாஸ்டர் என்று போற்றப்படுவர் ஜாம்பவானான சச்சின் டெண்டுல்கர். இந்தியாவின் கிரிக்கெட் வரலாற்றி சச்சின் டெண்டுல்கர் நிகழ்த்திய சாதனைகள் ஏராளம். சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் 100 சதம், டெஸ்ட்டில் 15, 921 ரன்கள் ஒருநாள் போட்டிகளில் 18, 426 ரன்கள் என பல உலக சாதனைகளை படைத்துள்ளார்.
சச்சின் டெண்டுல்கர் - அஞ்சலி தம்பதியருக்கு சாரா டெண்டுல்கர் என்ற மகளும் அர்ஜுன் டெண்டுல்கர் மகனும் உள்ளனர். அர்ஜுன் டெண்டுல்கர் தந்தையைப் போலவே கிரிக்கெட்டில் களமிறங்கி மும்பை இந்தியன்ஸ் அணியில் விளையாடி வருகிறார். மகளான சாரா டெண்டுல்கர் லண்டனில் முதுகலைப் பட்டம் முடித்துள்ளார். இவர் தற்போது சச்சின் டெண்டுல்கர் தொண்டு நிறுவனத்தின் இயக்குநராக பொறுப்பேற்றுள்ளார்.
சச்சின் டெண்டுல்கர் அறக்கட்டளை (எஸ்டிஎஃப்) கடந்த 2019முதல் தொடங்கி இயங்கிவருகிறது. இந்த நிறுவனம் குறைபாடுள்ள குழந்தைகளுக்கு பல்வேறு உதவிகளை செய்து வருகிறது. தனது மகள் இந்த அறக்கட்டளைக்கு பொறுப்பேற்றது குறித்து தனது சச்சின் டெண்டுல்கர் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது.
” எனது மகள் சாரா டெண்டுல்கர் சச்சின் டெண்டுல்கர் அறக்கட்டளையின் இயக்குநராக சேர்ந்ததில் மிக்க மகிழ்ச்சியடைகிறேன். சாரா, லண்டனில் மருத்துவ, பொது சுகாதார ஊட்டச்சத்து துறையில் முதுகலை பட்டம் முடித்துள்ளார். இந்தப் பயணத்தை தொடங்குவதன் மூலம் குழந்தைகளின் முன்னேற்றதுக்கு உதவும் வகையில் கல்வி, விளையாட்டு, உடல் நலத்துக்கு சேவை செய்வதால் உலகளாவிய கற்றல் முழுமையடையும் ” என சச்சின் டெண்டுல்கர் குறிப்பிட்டுள்ளார்.