டி20 கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக இரண்டு சதம்... சாதனை படைத்த #SanjuSamson!
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக இரண்டு சதம் அடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை சஞ்சு சாம்சன் படைத்துள்ளார்.
தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. அதன்படி இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 ஆட்டம் டர்பனில் நேற்று (நவ.8) நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 202 ரன்கள் குவித்தது.
இதையும் படியுங்கள் : #WestBengal | எக்ஸ்பிரஸ் ரயிலின் 4 பெட்டிகள் தடம்புரண்டு விபத்து – பயணிகளின் நிலை என்ன?
இந்தியா அணியின் தொடக்க ஆட்டக்காரரான சஞ்சு சாம்சன் அதிரடியாக ஆடினார். சிக்சர் மழை பொழிந்த சஞ்சு சாம்சன் 47 பந்துகளில் சதமடித்து அசத்தினார். அதிரடியாக ஆடிய சாம்சன் 50 பந்தில் 107 ரன் எடுத்த நிலையில் அவுட் ஆனார். சர்வதேச டி20 கிரிக்கெட்டில் சஞ்சு சாம்சனின் 2வது சதம் இதுவாகும். இதன்மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக இரண்டு சதம் அடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையையும் சாம்சன் படைத்தார்.