For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

ஓராண்டு இடைநீக்கத்துக்கு பிறகு மாநிலங்களவையில் பங்கேற்க சஞ்சய் சிங்!

11:57 AM Jun 27, 2024 IST | Web Editor
ஓராண்டு இடைநீக்கத்துக்கு பிறகு மாநிலங்களவையில் பங்கேற்க சஞ்சய் சிங்
Advertisement

கடந்தாண்டு மழைக்காலக் கூட்டத்தொடரின் போது மாநிலங்களவையில் அமளியில் ஈடுபட்ட சஞ்சய் சிங்கை இடைநீக்கம் செய்யப்பட்டதை ரத்து செய்து அவைத் தலைவர் ஜகதீப் தன்கர் உத்தரவிட்டுள்ளார்.

Advertisement

கடந்தாண்டு மழைக்காலக் கூட்டத்தொடரின் போது அமளியில் ஈடுபட்ட காரணத்துக்காக சஞ்சய் சிங்கை ஓராண்டு இடைநீக்கம் செய்து கடந்த ஆண்டு ஜூலை 14ம் தேதி ஜகதீப் தன்கர் அறிவித்திருந்தார்.

இந்நிலையில்,  இன்று மாநிலங்களவைக் கூட்டம் தொடங்கிய நிலையில் தடைக்காலம் முடிவதற்கு முன்னதாகவே சஞ்சய் சிங்கின் இடைநீக்கத்தை ரத்து செய்து ஜகதீப் தன்கர் உத்தரவிடுள்ளார்.  மேலும், நாடாளுமன்ற வளாகத்துக்குள் இன்று முதல் நுழைவதற்கு அவைத் தலைவர் அனுமதி அளித்துள்ளதாக மாநிலங்களவை செயலகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதையும் படியுங்கள் : 'அடுத்த பட்ஜெட் வரலாற்று சிறப்பு மிக்கதாக இருக்கும்...' - திரௌபதி முர்முவின் உரையில் இடம் பெற்ற 10 முக்கிய அம்சங்கள்...

இதுகுறித்து செய்தியாளர்களுடன் இன்று காலை பேசிய சஞ்சய் சிங் கூறியதாவது:

"எனது இடை நீக்கத்தை ரத்து செய்த குடியரசுத் துணைத் தலைவருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.  மாநிலங்களவை இன்று தொடங்கவுள்ள நிலையில்,  கூட்டுக் கூட்டத்தொடரில் குடியரசுத் தலைவரின் உரையை நாங்கள் புறக்கணிக்கிறோம்.  அரவிந்த் கெஜ்ரிவாலின் கைதை கண்டித்து புறக்கணிக்க முடிவெடுத்துள்ளோம்.  குடியரசுத் தலைவரின் உரை என்பது மத்திய அரசு எழுதிக் கொடுத்தது என்பதால் புறக்கணிக்கிறோம்"

இவ்வாறு அவர் தெரிவித்திருந்தார்.

Tags :
Advertisement