Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

காங்கிரஸில் இருந்து நீக்கப்பட்ட மகாராஷ்டிர மாநில மூத்த தலைவர்! ஏன் தெரியுமா?

10:35 AM Apr 04, 2024 IST | Web Editor
Advertisement

காங்கிரஸ் கட்சியில் இருந்து மகாராஷ்டிர முன்னாள் தலைவர் சஞ்சய் நிருபத்தை நீக்குவதாக கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் அறிவித்துள்ளார்.

Advertisement

மகாராஷ்டிராவில் காங்கிரஸ் கட்சி,  சிவசேனாவுடன் கூட்டணி வைத்ததை மும்பை காங்கிரஸ் முன்னாள் தலைவர் சஞ்சய் நிருபம் எதிர்த்து வருகிறார்.  "மகாராஷ்டிராவில் 17 வேட்பாளர்களை தன்னிச்சையாக சிவசேனா அறிவித்தது.  இது மும்பையில் காங்கிரஸ் கட்சியை ஒழிக்கும் சதி" என சஞ்சய் நிருபம் கூறியிருந்தார்.

இதையும் படியுங்கள் : ரசிகர்களின் இதயங்களை கொள்ளையடிக்கும் 'Queen of Tears' - நெட்ஃபிளிக்ஸ் Top 10 பட்டியலில் முதலிடம்!

இந்நிலையில்,  காங்கிரஸ் கட்சிக்கு எதிராக தொடர்ந்து செயல்படும் குற்றச்சாட்டை அடுத்து சஞ்சய் நிருபத்தை 6 ஆண்டுகளுக்கு கட்சியில் இருந்து நீக்கம் செய்ய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஒப்புதல் அளித்துள்ளதாக வேணுகோபால் தெரிவித்துள்ளார்.  மேலும், மக்களவைத் தேர்தலுக்கான காங்கிரஸ் நட்சத்திரப் பேச்சாளர்கள் பட்டியலில் இருந்தும் அவரது பெயர் நீக்கம் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில்,  மகாராஷ்டிரத்தில் ஆளும் பாஜக கூட்டணியில் சஞ்சய் நிருபம் இணைவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.  முன்னதாக, மகாராஷ்டிர சட்டப்பேரவை தேர்தலின்போது சிவசேனைக்கு எதிராக கருத்து தெரிவித்த சஞ்சய் நிருபத்தை மாநில தலைவர் பதவியில் இருந்து நீக்கம் செய்து கட்சித் தலைமை நடவடிக்கை எடுத்திருந்தது.

Tags :
6 yearsbannedCongresscontroversyPARTYSanjay Nirupam
Advertisement
Next Article