Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

உண்மைச் சம்பவத்தை அலசும் 'அலங்கு' | திரைப்பட தயாரிப்பாளரான #SASangamitraAnbumani!

01:55 PM Oct 16, 2024 IST | Web Editor
Advertisement

எஸ்.பி.சக்திவேல் இயக்கும் ‘அலங்கு’ திரைப்படத்தின் மூலம் எஸ்.ஏ.சங்கமித்ரா அன்புமணி தயாரிப்பாளராக அறிமுகமாகிறார்.

Advertisement

‘உறுமீன்’, ‘பயணிகள் கவனிக்கவும்’ ஆகிய திரைப்படங்களை இயக்கிய எஸ்.பி.சக்திவேல் அடுத்து இயக்கும் திரைப்படம், ‘அலங்கு’. இதில் கதாநாயகனாக குணாநிதி நடிக்கிறார். மலையாள நடிகர் செம்பன் வினோத், காளி வெங்கட், சரத் அப்பானி, ஸ்ரீரேகா, கொற்றவை, ரெஜின் ரோஸ், சண்முகம் முத்துசாமி என பலர் நடித்துள்ளனர். குறிப்பாக, இந்த திரைப்படத்தில் நாய் ஒன்று முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறது. எஸ்.பாண்டிகுமார் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு அஜீஷ் இசையமைக்கிறார்.

‘அலங்கு’ திரைப்படத்தை டிஜி பிலிம் கம்பெனி மற்றும் மக்னாஸ் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் டி.சபரீஷ், எஸ்.ஏ.சங்கமித்ரா அன்புமணி தயாரிக்கின்றனர். இந்த திரைப்படம் மூலம் எஸ்.ஏ.சங்கமித்ரா தயாரிப்பாளராக அறிமுகமாகிறார்.

இதனிடையே தமிழ்நாடு - கேரள எல்லைப் பகுதியில் மருத்துவ கழிவுகளில் ஆரம்பித்து விலங்குகள் எச்சம் கழிவுகள் வரை கொட்டப்பட்டு வருவதை தினசரி செய்தியாக பார்த்துக் கொண்டு வருகிறோம். இந்த கழிவுகளால் என்னென்ன ஆபத்து ஏற்படுகிறது என்ற உண்மைச் சம்பவத்தை மையமாக வைத்து தான் இப்படத்தை உருவாக்கியிருக்கிறார்.

இதையும் படியுங்கள் : #VijayAntony நடிக்கும் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!

இந்த திரைப்படம் பற்றி இயக்குநர் எஸ்.பி.சக்திவேல் கூறியதாவது:

“மனிதர்களுக்கும், நாய்களுக்கும் இருக்கும் பாசம், உறவு எப்படி ஒரு சம்பவத்தின் மூலம் ஒரு பகையாக, மோதலாக மாறுகிறது என்பதுதான் இந்தப் படத்தின் கதை. அதன் தொடர்ச்சியாக நடைபெறும் சம்பவங்கள் தான் இதன் திரைக்கதை. படத்தின் 95 சதவிகித காட்சிகளை அடர் வனப்பகுதிகளில் படமாக்கி இருக்கிறோம். முற்றிலும் மாறுபட்ட திரை அனுபவத்தை இந்தப்படம் தரும்”

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதனிடையே, அலங்கு திரைப்படத்தின் முதல் பிரதியை பார்த்ததும் “அலங்கு” படத்தை முழுவதுமாக கைப்பற்றியது சக்தி பிலிம் பேக்டரி சக்திவேலன்.

Tags :
AlanguDirectedmovieNews7Tamilnews7TamilUpdatesproducerSangamitra AnbumaniSp Sakthivel
Advertisement
Next Article