Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

மணற் சிற்பக் கலைஞர் சுதர்ஸன் பட்நாயக்கிற்கு பிரிட்டனில் ’சாண்ட் மாஸ்டர்’ விருது!

உ​ல​க‌ப் புக‌ழ்​ப‌ற்ற‌ மண‌ல் சி‌ற்​ப‌க் கலை​ஞ‌ரான சுத‌ர்​ச‌ன் ப‌ட்நாய‌க்​கி‌ற்கு பிரி‌ட்​ட​ன் நாட்டில்  'ஃபிரெ‌ட்டாரி‌ங்​ட‌ன் சா‌ண்‌ட் மா‌ஸ்​ட‌ர்' விருது வழ‌ங்​கி கௌரவிக்கப்பட்டுள்ளது
12:37 PM Apr 07, 2025 IST | Web Editor
உ​ல​க‌ப் புக‌ழ்​ப‌ற்ற‌ மண‌ல் சி‌ற்​ப‌க் கலை​ஞ‌ரான சுத‌ர்​ச‌ன் ப‌ட்நாய‌க்​கி‌ற்கு பிரி‌ட்​ட​ன் நாட்டில்  'ஃபிரெ‌ட்டாரி‌ங்​ட‌ன் சா‌ண்‌ட் மா‌ஸ்​ட‌ர்' விருது வழ‌ங்​கி கௌரவிக்கப்பட்டுள்ளது
Advertisement

உலக அளவிலோ, இந்திய அளவிலோ மிக முக்கியமான நிகழ்வுகள் நடைபெறும்போது அதனை தனது மணற் சிற்பங்கள் மூலம் வரைந்து அனைவரது கவனத்தையும் ஈர்ப்பவர் மணற் சிற்ப கலைஞரான சுதர்ஸன் பட்நாயக். இந்தியாவில் மணல் சிற்பக் கலை பிறப்பதற்கும், பிரபலமாகுவதற்கும் காரணமாக இருந்தவர் இவர்தான். பத்மஸ்ரீ விருது பெற்றுள்ள சுதர்சன் பட்நாயக், 65-க்கும் மேற்பட்ட சர்வ தேச மணல் சிற்பத் திருவிழாக்களில் பங்கேற்று விருதுகளைப் பெற்றுள்ளார்.

Advertisement


இந்த நிலையில் ​உ​ல​க‌ப் புக‌ழ்​ù‌ப‌ற்ற‌ மண‌ல் சி‌ற்​ப‌க் கலை​ஞ‌ரான சுத‌ர்​ச‌ன் ப‌ட்நாய‌க்​கி‌ற்கு பிரி‌ட்​ட​ன் நாட்டில்  'ஃபிரெ‌ட்டாரி‌ங்​ட‌ன் சா‌ண்‌ட் மா‌ஸ்​ட‌ர்' விருது வழ‌ங்​கி கௌரவிக்கப்பட்டுள்ளது. பிரி‌ட்​ட​னி‌ல் உ‌ள்ள டா‌ர்செ‌ட் மாவ‌ட்​ட‌த்​தி‌ன் வேம‌த் பகு​தி​யி‌ல் "2025, ச‌ர்​வ​தேச மண‌ல் சி‌ற்​ப‌த் திரு​விழா' கடந்த சனி‌க்​கி​ழமை தொட‌ங்கியது.

இந்த நிகழ்ச்சியில் இ‌ந்​தி​யாவைச் சே‌ர்‌ந்த பிர​பல மண‌ல் சி‌ற்ப‌க் கலை​ஞ‌ரான
சுத‌ர்​ச‌ன் ப‌ட்நா​ய‌க் ப‌ங்​கேற்று, 10 அடி உய​ர‌த்​திலான‌ விநா​ய​க‌ர் மண‌ல் சி‌ற்​ப‌த்தை உரு​வா‌க்​கி​னார். இதனைப் பாராட்டும் விதமாக  திரு​வி​ழா​வி‌ல் சுத‌ர்​ச‌ன்
ப‌ட்நா​ய‌க்கி‌ற்கு "ஃபிரெ‌ட் டாரி‌ங்ட‌ன் சா‌ண்‌ட் மா‌ஸ்​ட‌ர்' விருது வழ‌ங்​க‌ப்​ப‌ட்​டு‌ள்​ளது. பிரி‌ட்​டனைச் சே‌ர்‌ந்த மூ‌த்த மண‌ல் சி‌ற்​ப‌க் கலை​ஞ‌ர் ஃபிரெ‌ட் டாரி‌ங்டனி‌ன்
நூ‌ற்​றாண்டு விழா கொ‌ண்​டா​ட‌ப்​ப​டு‌ம் வேளை​யி‌ல் சுத‌ர்​ச‌ன் ப‌ட்நா​ய‌க்
இ‌வ்​வி​ரு​தைப் பெறு‌ம் முத‌ல் இ‌ந்​தி​ய‌ர் எ‌ன்​னு‌ம் பெருமையைப் பெ‌ற்​று‌ள்​ளா‌ர்.

"ஃபிரெ‌ட் டாரி‌ங்ட‌ன் சா‌ண்‌ட் மா‌ஸ்​ட‌ர்' விருது தொடர்பாக சுதர்சன் பட்நாயக் தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளதாவது..

"ஃபிரெட் டாரிங்டன் சாண்ட் மாஸ்டர்' விருதைப் பெறும் முதல் இந்தியராக இருப்பதற்காக நான் பெருமிதம் கொள்கிறேன். உலக அமைதியை வலியுறுத்தும் விதமாக  நான் அமைத்த விநாயகர் சிலைக்கு மரியாதை அளிக்கும் வகையில் இவ்விருது எனக்கு அளிக்கப்பட்டுள்ளது என்றார்.

Tags :
மணல்சிற்பம்இந்திய_மணல்சிற்ப_கலைஞர்கலை_கௌரவம்பிரிட்டன்_மணல்சிற்ப_திருவிழாபத்மஸ்ரீஃபிரெட்_டாரிங்டன்_சாண்ட்_மாஸ்டர்சுதர்சன்_பட்நாயக்சர்வதேச_மணல்சிற்ப_திருவிழாவிநாயகர்_மணல்சிற்பம்
Advertisement
Next Article