Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

" #Samsung தொழிலாளர்கள் போராட்டத்தை கைவிட வேண்டும்" - அமைச்சர் தங்கம் தென்னரசு பேட்டி!

02:31 PM Oct 09, 2024 IST | Web Editor
Advertisement

சாம்சங் தொழிலாளர்கள் போராட்டத்தை கைவிட வேண்டும் என அமைச்சர் தங்கம் தென்னரசு வலியுறுத்தியுள்ளார்.

Advertisement

இது தொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியதாவது:

"சாம்சங் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ள விவகாரத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைச்சர் குழுவை நியமித்துள்ளார். தொழிலாளர்களின் நலன்கள், படித்த இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகள் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு தமிழ்நாடு அரசு தொடக்கத்தில் இருந்து இந்த பிரச்னையை அணுகி வருகிறது. தொழிலாளர்கள் போராட்டம் குறித்து பேச்சுவார்த்தையின் போது முன் எடுக்கப்பட்ட முக்கிய கோரிக்கைகளை சாம்சங் நிறுவனத்தினர் ஏற்று கொண்டுள்ளனர்.

அதற்கான ஒப்பந்தத்தையும் சாம்சங் நிறுவனத்தினர் மேற்கொண்டு இருக்கின்றனர். மாத ஊதியத்துடன் ஊக்கத்தொகை, அடிப்படை வசதிகள் போன்ற கோரிக்கைகளை சாம்சங் ஏற்றுள்ளது. சாம்சங் நிறுவனம் வேறு மாநிலத்திற்கு இடம்மாறுவதாக வெளியாகும் செய்திகள் தவறானவை. தொழில் முதலீட்டுக்கு உகந்த மாநிலமாக தமிழ்நாடு உள்ளது.

இதையும் படியுங்கள் : அமெரிக்காவில் #Vettaiyan கொண்டாட்டம்…பிரம்மாண்ட கார் அணிவகுப்புடன் கோலாகலம்!

சி.ஐ.டி.யூ. தொழிற்சங்கத்தை அங்கீகரிக்காது என எப்போதும் சொல்லவில்லை. அப்பகுதியில் இயங்கும் பல தொழிற்சாலைகளில் இந்த சங்கத்தை அரசு அங்கீகரித்துள்ளது. இவ்விவகாரத்தில் சாம்சங் நிறுவனம், தொழிற்சங்கத்தை அங்கீகரிக்க எதிர்ப்பு தெரிவித்துள்ளது. நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதால் அரசு தற்போது எந்த முடிவும் எடுக்க முடியவில்லை.

இந்த விவகாரத்தில் நீதிமன்றம் என்ன முடிவு கூறினாலும் அதனை அரசு செயல்படுத்தும். தொழிலாளர்களின் பல கோரிக்கைகளை நிறுவனம் ஏற்றுக்கொண்டுள்ளது. எனவே, சாம்சங் தொழிலாளர்கள் போராட்டத்தை கைவிட வேண்டும். அரசியல் கட்சிகள் அனுமதியின்றி போராடினால் எப்போதும் போல் காவல்துறை கைது செய்து பின்னர் விடுவிப்பது வாடிக்கையானது.

அதே போல தான் போராடிய தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டு உடனடியாக பிணையில் விடுவிக்கப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்கள் யாரும் ரிமாண்ட் செய்யப்படவில்லை. தொழிலாளர்களின் நலனும் முக்கியம், இளைஞர்களின் வேலைவாய்ப்பு அரசுக்கு முக்கியம். போராடும் தொழிலாளர்களை விரோதமாக பார்க்கவில்லை. அடக்குமுறை நடக்கவில்லை. போராட்டத்தை அரசியலாக பார்க்கவில்லை. சி.ஐ.டி.யு.க்கும் அரசுக்கும் எந்த விரோதமும் இல்லை. பேச்சுவார்த்தை மூலம் பிரச்னையை முடிவுக்கு கொண்டுவர அரசு தயாராக உள்ளது"

இவ்வாறு அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.

Tags :
MinisterNews7Tamilnews7TamilUpdatessamsungSamsungStrikeSamsungworkersThangamThennarasu
Advertisement
Next Article