சமந்தா தயாரிப்பில் வெளியாகும் முதல் திரைப்படம்!
நடிகை சமந்தாவின் சொந்த தயாரிப்பில் உருவான ‘சுபம்’ படப்பிடிப்பு நிறைவு...
03:44 PM Mar 16, 2025 IST | Web Editor
Advertisement
தமிழ், தெலுங்கு, ஹிந்தி என இந்திய திரையுலகில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. நடிகை சமந்தா கடைசியாக குஷி படத்தில் நடித்திருந்தார். தற்போது, மா இன்டி பங்காரம் படத்தில் நடித்து வருகிறார். சிட்டாடல் இணையத்தொடர் ஓடிடியில் வெளியானது.
Advertisement
இதனிடையே நடிகை சமந்தா தனது தயாரிப்பு நிறுவனத்தை 2023ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தினார். ட்ரலாலா மூவிங் ஃபிக்சர்ஸ் எனும் தயாரிப்பு நிறுவனத்தை கடந்த 2023இல் சமந்தா தொடங்கினார். இந்தத் தயாரிப்பில் முதல் படமாக 'சுபம்' என்ற திரைப்படம் வெளியாகவிருக்கிறது.
இந்தப் படத்தை வசந்த் மரிகாந்தி எழுத, பிரவீன் கேண்ட்ரெகுலா இயக்கியுள்ளார். இதில் ஹர்ஷித் மல்கிரெட்டி, கண்ஷ்ரியா கோந்தம், ஷாலினி கொண்டேபுடி, ஷ்ராவனி நடித்துள்ளார்கள். இப்படம் ரிலீஸுக்கு தயாராகி உள்ளதாக நடிகை சமந்தா தெரிவித்துள்ளார்.