Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

தீபாவளிக்காக களைகட்டிய ஆட்டுச் சந்தை! பாவூர்சத்திரத்தில் விற்பனை அமோகம்!

08:30 AM Oct 24, 2024 IST | Web Editor
Advertisement

தீபாவளி பண்டிகை இன்னும் ஒரு சில தினங்களில் கொண்டாடப்பட உள்ள நிலையில் பாவூர்சத்திரம் ஆட்டுச் சந்தையில் ஆடுகள் விற்பனை கனள கட்டி உள்ளது.

Advertisement

தீபாவளி பண்டிகைக்கு தமிழ்நாடு முழுவதும் உள்ள அசைவ பிரியர்களுக்காக அந்தந்த மாவட்டங்களில் உள்ள புகழ்பெற்ற கால்நடை சந்தைகளில் ஆடு மாடு கோழிகள் விற்பனை சூடு பிடித்துள்ளது.

வியாபாரிகள், பொதுமக்கள் என அனைவரும் மொத்தமாகவும் சிலரையாகவும் ஆடு, மாடு, கோழிகளை வாங்க அதிக அளவில் வருகை தருகின்றனர்.அந்த வகையில் தீபாவளி பண்டிகை முன்னிட்டு தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் ஆட்டுச் சந்தையில் விற்பனை களைகட்டியதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தீபாவளி பண்டிகை இன்னும் இரண்டு தினங்களில் கொண்டாடப்படும் நிலையில் அசைவப் பிரியர்களுக்காக ஆட்டு இறைச்சி அதிக அளவில் விற்பனையாகும் என்ற எதிர்பார்ப்பில் ஆட்டு இறைச்சி கடைக்காரர்கள் வியாபாரிகள் அதிக அளவில் சந்தைக்கு வருகை புரிந்ததால் தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் ஆடு, மாட்டுச் சந்தையில் வியாபாரம் களைகட்டியது.

இந்த சந்தையை பொறுத்தவரை வாரந்தோறும் வியாழக்கிழமை மட்டுமே செயல்படும் சந்தையில் ஆடு, மாடுகள் ஒரே இடத்தில் விற்பனைக்கு கொண்டு வருவதால் சந்தை எப்போதுமே பரபரப்பாக காணப்படும். தரத்திற்கு ஏற்றது போல் ஆடுகள் விற்பனையாவதால் ஆட்டின் உரிமையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் ஒரு ஆடு 6000 ரூபாய் முதல் 25 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை ஆகிறது. இன்னும் விற்பனை அதிகரிக்கும் என்பதால் வியாபாரிகளும் ஆடு மாடு உரிமையாளர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags :
Cattle SaleDiwali
Advertisement
Next Article