சேலம் இளைஞரணி மாநாடு: ட்ரோன்களில் ஜொலித்த திடல் - பிரத்யேக வீடியோ!
சேலத்தில் இளைஞரணி 2வது மாநில மாநாட்டில் கலந்து கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு காட்சிப்படுத்தப்பட்ட ட்ரோன்களின் பிரத்யேக வீடியோ இங்கே இணைக்கப்பட்டுள்ளது.
திமுகவின் இளைஞரணி 2வது மாநில மாநாடு சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன் பாளையத்தில் நாளை (ஜன. 21) காலை தொடங்கி முழு நாள் நிகழ்வாக நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் கலந்துகொள்வதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை சேலம் வந்தடைந்தார். பின்னர் விழா நடைபெறும் இடத்திற்கு வந்தடைந்தார். கருப்பு சிவப்பு உடைய அணிந்து இருசக்கர வாகனத்தில் அணிவகுத்து வரும் இளைஞர் அணி நிர்வாகிகளை கைகளை அசைத்து உற்சாகப்படுத்தினார்.
இந்த விழாவில் ட்ரோன்கள் ஷோ நடைபெற்றது. 1500 ட்ரோன்கள் பங்கேற்புடன் பின்னணி இசைக்கேற்ப பச்சை நிறம் உள்ளிட்ட பல்வேறு வண்ணங்களில் மாஸ் காட்டின. ட்ரோன்கள் பின்னணியில் திராவிட இயக்க வரலாறு மற்றும் தமிழ்நாட்டின் வரலாறு விளக்கப்பட்டது. ஒற்றை செங்கலை தூக்கி நிற்கும் உதயநிதி ஸ்டாலின் உருவம் ட்ரோன்களில் காட்சிப்படுத்தப்பட்டது. தமிழ் வெல்லும் என முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் கையெழுத்து மற்றும் பேனா வடிவம் ட்ரோன்கள் மூலம் தத்துரூபமாக காட்சிப்படுத்தப்பட்டன.
இந்த நிகழ்வினை பிரத்யேகமாக காண: