நாமக்கல்லில் தடை செய்யப்பட்ட ஆப்பிரிக்க கெளுத்தி மீன்கள் விற்பனை - 36 கிலோ மீன்கள் அழிப்பு!
நாமக்கல்லில் தடை செய்யப்பட்ட ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்கள் விற்பனை செய்யப்பட்ட நிலையில், அதிகாரிகள் அதிரடியாக ஆய்வு நடத்தி 36 கிலோ மீன்களை பறிமுதல் செய்து அழித்தனர்.
நாமக்கல் நகர பகுதியில் தடை செய்யப்பட்ட ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்கள் விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட ஆட்சியரிடம் புகார் வந்துள்ளது. இதனையடுத்து நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா உத்தரவின் படி, மீன்வளத்துறை உதவி இயக்குனர் உமா, உணவு பாதுகாப்புத்துறை பாதுகாப்பு அலுவலர் முருகன், நகராட்சி சுகாதார ஆய்வாளர் திருமூர்த்தி, விலங்குகள் வதை தடுப்பு உதவி ஆய்வாளர் தர்மராஜ் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.
நாமக்கல் சேந்தமங்கலம் சாலை, ராமாவரம்புதூர், மோகனூர் சாலை, நல்லிபாளையம் உள்ளிட்ட பகுதியில் அதிகாரிகள் நடத்திய அதிரடி ஆய்வில் தடை செய்யப்பட்ட ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்கள் விற்பனை செய்யப்பட்டது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 36 கிலோ ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.